‘கசட தபற’ விமர்சனம்
Updated: Aug 29, 2021

ஆறு கதைகள் கொண்ட கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற என்ற பெயர்களில் ஓவ்வொரு கதையும் ஓவ்வொரு விதமான கதை களத்தில் திரையில் பயணிக்கும் படம்தான் ‘கசட தபற’
பிரேம்ஜி தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார் . மற்றவர்களுக்கு அவரது உதவும் குணத்தை பார்த்த ரெஜினா பிரேம்ஜியை காதலிக்கிறார் .
இருவரும் காதலித்து வரும் நிலையில், இருவரது காதலை எதிர்க்கும் ரெஜினாவின் தந்தை பிரேம்ஜி மீது திருட்டு பட்டம் கட்டி அடியாட்களை வைத்து கடத்த 'கவசம்' என்ற பட தலைப்புடன் ஆரம்பிக்கும் இவர்களின் கதை, மற்ற 5 கதைகளுடன் கலந்து பயணிக்கிறது.
இயல்பாகவும் வெகுளித்தனமானவும் நடிப்பில் பிரேம்ஜியும் ,கதைக்கேற்றபடி ரெஜினாவும்,யூகி சேதுவும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை செய்துள்ளது சிறப்பு .
இரண்டாவது கதையான 'சதியாடல்' கதையில் ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்பத் மகன் மீது பாசம் கொண்டவராக எதார்த்தமான நடிப்பில் அசத்த மகனாக வரும் சாந்தனு பாக்யராஜும் அவருக்கு இணையான நடிப்பில் அசத்துகிறார் .
'அறம்பற்ற' கதையில் சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் விஜயலட்சுமி நடிப்பில் அதிரடி நாயகியாக சண்டைக்காட்சிகளில் அசத்தலான ஜொலிப்பு .
இயக்குநர் வெங்கட் பிரபு 'அக்கற' கதையில் ஏழை குடும்ப தலைவனாக மூன்று குழந்தைகளின் தந்தையாக தனது அப்பாவித்தனத்தால் தூக்கு தண்டனை கைதியாகி, குடும்பத்தை நினைத்து ஏங்கும் போதும், கடைசியில் தூக்கு மேடைக்கு செல்லும்போது , அனைவரும் கண் கலங்கும் வகையில் நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார் !
'தப்பாட்டம்' கதையில், கதையின் நாயகனாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் சந்தீப் கிஷன் அழுத்தமான நடிப்பால் கவர்கிறார் . கணவர் மீது பிரியம் கொண்டவராக வரும் பிரியா பவானி சங்கரின் நடிப்பு சிறப்பு !
'பந்தயம்' கதையில் ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார் !
செண்ட்ராயன், பசங்க சிவக்குமார், பிருத்வி பாண்டியராஜ், ஆகாஷ் அரவிந்த் நடிப்பில் இவர்களது பங்களிப்பு சிறப்பு !
யுவன் சங்கர் ராஜா ,ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைக்க
மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் ஆகிய ஆறு பேர் படத்தொகுப்பாளர்களாக பணியாற்ற ,
ஒளிப்பதிவாளர்களாக விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் என அனைவரது பங்களிப்பும் இந்த கதைகளின் திரைக்கதைக்கு உறுதுணை !
நேர்த்தியான தெளிவான திரைக்கதையில் கதைகளின் கதாபாத்திரங்கள் அனைத்தும் படம் பார்ப்பவர்கள் மனதில் பதியும்படி படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை அனைவரும் பாராட்டும் வகையில் ஆறு கதைகளை மிக சிறப்பாக திறம்பட இயக்கியுள்ளார் இயக்குனர் சிம்பு தேவன்
படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ‘கசட தபற’ நேர்த்தியான கதம்பம் !
Mediatalks.online JANAGIRAMAN