இயக்குனர் வாய்ப்பு தேடும் சதீஷும் கேமரா மேன் ரமேஷ் திலக்கும் நண்பர்களாக ஒரே அறையில் தங்கி பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரிடம் பேசி ஒரு திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர் .
இந் நிலையில் செக்ஸ் டாக்டரான ஜி பி முத்துவிடம் உதவியாளராக வேலை செய்கிறார் சதீஷின் காதலி தர்ஷா குப்தா.
சதீஷின் காதலியான தர்ஷா குப்தாவிற்கு அடிக்கடி கனவில் கெட்ட கனவாக அமானுஷ்ய சக்தி ஒன்று வந்து செல்கிறது. அந்த அமானுஷ்ய கெட்ட சக்தி யார் என்று கண்டறிய மாந்திரிக சாமியார் பாலாவிடம் செல்கிறார் தர்ஷா குப்தா
அமானுஷ்ய கெட்ட சக்தியை பிடிக்க பூஜை செய்யும் பாலா,, பல வருடங்களுக்கு முன் அணகொண்டபுரம் என்ற ராஜ்யத்தை கட்டி ஆண்ட பேரரசியான சன்னி லியோனின் (மாயசேனா)ஆவி என பாலா கண்டுபிடிக்கிறார்.
பூஜை செய்யும் நேரத்தில் தர்ஷா குப்தாவின் காதலனான சதீஷும் நண்பனான ரமேஷ் திலக்கும் பிரட்சனை செய்ய அந்த ஆவி தர்ஷா குப்தாவின் உடலுக்கு நுழைந்து விட, தன்னை சன்னி லியோனின் (மாயசேனா)ஆவி
இருக்கும் இடமான அனகொண்டாபுரம் அரண்மனைக்கு அழைத்து செல்லும்படி சதீஷையும் ரமேஷ் திலக்கையும் தர்ஷா குப்தாவின் உடலில் நுழைந்த ஆவி ! மிரட்டுகிறது.
மிரண்டு போன இருவரும் தர்ஷா குப்தாவை பாழடைந்த அனகொண்டாபுரம் அரண்மனைக்கு அழைத்து செல்கின்றனர்.
அந்த அனகொண்டாபுரத்தில் மந்திரவாதியாக வரும் மொட்டை ராஜேந்திரன் பேரரசி சன்னி லியோனின் வரலாற்றை கதையாக சொல்ல,,,,,
முடிவில் கெட்ட ஆவியை சதீஷால் மட்டுமே அடக்க முடியும் அனகொண்டாபுரம் அரண்மனைக்கு சதிஷ் மட்டும்தான் செல்ல வேண்டும் என மொட்டை ராஜேந்திரன் சொல்கிறார் . இறுதியில் சதீஷ் அரண்மனைக்குள் நுழைந்து பேயாக மாறிய சன்னி லியோனை அடக்கினாரா..? இளவரசி சன்னி லியோன் ராணியாக வாழ்ந்த காலத்தில் சதீஷிடம் இருந்த தொடர்பு என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'ஓ மை கோஸ்ட் '
இளவரசி மாய சேனாவாக வரும் கவர்ச்சியான சன்னி லியோன் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.இரண்டாம் பாதியில் மட்டுமே சன்னி லியோன் வருவதால், ரசிகர்கள் ஏமாறுமளவில் காட்சிகள் குறைவாக இருக்கிறது !
கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் தர்ஷா குப்தா.
காமெடி கலந்த வழக்கமான நடிப்பில் சதீஷ் ,,,,, சன்னி லியோனின் அரண்மனையில் இருக்கும் ராஜ குருவாக யோகி பாபு ,நண்பராக வரும் ரமேஷ் திலக்,,, பாலா , தங்க துரை, மொட்டை ராஜேந்திரன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
ஜாவேத் ரியாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்,,, குறிப்பாக முடிவில் வரும் 'ஓ மை கோஸ்ட் ' பாடல் .
தீபக் டி மேனன் ஒளிப்பதிவில் காட்சிகளில் பேய் படத்திற்கான மிரட்டல் !
உலக அளவில் இளைஞர்கள் கொண்டாடும் நடிகையான சன்னி லியோனை நாயகியாக நடிக்க வைத்து காமெடியுடன் சேர்ந்து திகில் கலந்த பேய் கதையை ,,, பயமில்லாமல் ரசிகர்கள் ரசிக்கும்படி ஜாலியான பேய் படமாக
இயக்கியுள்ளார் இயக்குனர் யுவன் .
ரேட்டிங் : 3 / 5
Comments