top of page

' குடி மகான் ' - விமர்சனம் !


நாயகன் விஜய் சிவன் வங்கிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யும் ஏஜென்சி ஒன்றில் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறார் .


குடிகார தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி,,,மனைவி சாந்தினி குழந்தைகளுடன் நடுத்தர வர்க்க குடும்ப தலைவனாக விஜய் சிவன் வாழ்ந்து வரும் நிலையில்,,,,


போண்டா , டீ ,காபியுடன் , பழ ரச ஜூஸ் ,குளிர்பானம் என ஏதாவதொன்றை

குடித்தாலே மது அருந்தியதை போல போதை தலைக்கு ஏறி வினோதமான நோயின் பாதிப்புக்குள்ளாகிறார் விஜய் சிவன்.


இந்நேரத்தில் நோயின் பாதிப்பை அறியாத விஜய் சிவன் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும்போது தானாகவே போதை ஏறி மெஷினில் நூறு ரூபாய் வைப்பதற்கு பதிலாக ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைத்து விடுகிறார்.


இதனால் வங்கிஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் கைக்கு ஆயிரக்கணக்கில் அந்த பணம் போய் விடுகிறது.


இப் பிரச்சனையால் அதிர்ச்சியடையும் மேலதிகாரி அரவிந்த் ஜானகிராமன் விஜய் சிவனை வேலையிலிருந்து தூக்குகிறார் .


வேலையை பறி கொடுத்த விஜய் சிவன் மீண்டும் வேலையில் சேர பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேட ஒவ்வொருவரும் விரட்டி அடிக்கின்றனர் .


ஒரு கட்டத்தில் விஜய் சிவன் பணத்தை எடுத்த வாடிக்கையாளரான

மது பாரில் இருக்கும் கதிரவனிடம் பணத்தை கேட்கும்போது ,,,,


அங்கு வரும் குடிகார சங்க தலைவன் நமோ நாராயணாவை சந்திக்க ,,, பிரச்சனையறிந்த நமோ நாராயணா தலைமையில் பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேடி செல்கிறார் விஜய் சிவன்.


முடிவில் விஜய் சிவனுக்கு ஆயிரக்கணக்கில் கை மாறி போன பணம் கிடைத்ததா?


பறி போன வேலையில் விஜய் சிவன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதை காமெடி ரகளையாக சொல்லும் படம்தான் 'குடி மகான்'


நாயகன் விஜய்சிவன் மனைவியிடமும், குழந்தைகளிடம் பாசமாக நடுத்தர வர்க்க குடும்ப தலைவனாக இயல்பாகவும் , மது குடிக்காமலேயே போதை தலைக்கு ஏறியவுடன் செய்யும் அலப்பறை காட்சிகளில் எதார்த்தமாகவும் வாடிக்கையாளர்கள் வீடுகளில் ஏ.டி.எம்.மில் எடுத்த பணத்தை கேட்டு கெஞ்சும்போது கதாபாத்திரத்துடன் இணைந்து உடல் மொழியில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக விஜய் சிவனின் மனைவியாக வரும் சாந்தினி தமிழரசன் கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !


விஜய் சிவனின் தந்தையாக நடித்துள்ள குடிகார சுரேஷ் சக்கரவர்த்தி, குடிகார சங்கத்தின் தலைவராக வரும் நமோ நாராயணா , சங்க உறுப்பினர்களாக ஜி.ஆர்.கதிரவன், ஆனஸ்ட்ராஜ், லவ்லி ஆனந்த், டென்னிஸ் என இவர்களது காமெடி கலாட்டாவுடன்,,, கல்யாண மாப்பிளையான சேதுராமனின் காமெடி ரகளையில் ரசிகர்களின் சிரிப்பில் தியேட்டரில் திருவிழா கோலம் !!


தனுஜ் மேனன் இசையில் ரசிக்கும்படியான பாடல்களுடன் கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையும் , மெய்யேந்திரனின் நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


வித்தியாசமாக ,புதுமையாக இதுவரை எந்த படத்திலும் சொல்லாத கதையாக வினோதமான நோய் பாதித்த நாயகனின் கதையை மையமாக கொண்டு இயல்பான திரைக்கதையில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து மகிழும்படி கதையுடன் பயணிக்கும் நகைக்சுவை காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரகாஷ்.என்.


ரேட்டிங் ; 3 .5 / 5
bottom of page