top of page

‘ஷூட் தி குருவி’ - விமர்சனம் !


சிறுவனாக இருக்கும்போது வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஜாதி கலவரத்தில் தப்பியோடி முஸ்லீம் தாதாவின் ஆதரவில் வளர்ந்து பின் அவரையே போட்டு தள்ளி காவல்துறைக்கு பெரும் சவாலாக இருப்பதோடு வெளி உலகத்திற்கு முழுமையாக எந்த தகவலும் தெரியாமல் தன்னை கொல்ல வரும் எதிரிகளை நேரம் கொடுத்து கொல்பவர்தான் அர்ஜை (குருவி ராஜன்) .


அர்ஜையை சுட்டு தள்ள போலீஸ் தனி படை அமைத்து தேடும் நேரத்தில் சாமர்த்தியமாக என்கவுன்டரில் சுட்டு கொல்ல வரும் அதிகாரிகளை கொலை செய்கிறார் அர்ஜை.


இந் நிலையில் நான் கேங் லீடர் இல்ல நேரம் கொடுத்து கொல்லும் கொலைகாரன் என மிரட்டும் அர்ஜையை சாதாரண இரண்டு பேர் கொலை செய்கின்றனர் .


அர்ஜையை கொன்ற அந்த இரண்டு பேர் யார் ?


போலீஸ் அதிகாரிகளே மிரளும் அர்ஜையை எதற்காக அந்த இரண்டு பேர் கொலை செய்தார்கள் என்பதை விறு விறுப்பான திரைக்கதையுடன் சொல்லும் படம்தான் ‘ஷூட் தி குருவி’


குருவி ராஜனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜை கம்பிரமான தோற்றத்தில் மிரட்டும் வில்லனாக ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


அர்ஜையின் அடியாளான சாய் பிரசன்னாவின் நண்பராக வரும் சிவ ஷா ரா முக்கிய கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவரும் விதத்தில் நடிப்பில் இயல்பு !

அர்ஜை தேடும் நபராக ஆஷிக் ஹுசைன்,,, எதிர்பாராத திருப்புமுனையான காட்சிகளில் ரசிக்கும்படியான நடிப்பில் எதார்த்தம் !


பேராசிரியராக நடித்துள்ள ராஜ்குமார்,சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !


ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவும் , மூன்ராக்ஸ் இசையில் மிரட்டலான பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .


காவல் துறைக்கே சவாலாக இருக்கும் மிக பெரிய தாதாவை சாதாரண இரண்டு பேர் போட்டு தள்ளும் கதையை மையமாக கொண்டு காமெடி கலந்த திரைக்கதையுடன், சொல்ல வந்த கதையை ரத்ன சுருக்கமாக அனைவரும் ரசிக்கும்படியான கேங்ஸ்டர் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மதிவாணன்.


ரேட்டிங் ; 3.5 / 5



bottom of page