மொபைல் போன் சர்வீஸ் சென்டர் கடைவைத்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், மனைவிஃப்ராங்க்ளின்மகள் பிரதிக்ஷாவுடன்வாடகை வீட்டில் வசிக்கிறார்.
கடையில்கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தைகவனித்து வரும் நேரத்தில் மகள்பிரதிக்ஷா மீது அளவு கடந்தபாசம் வைத்திருக்கும் முருகதாஸ், தன் மகள் எதைக்கேட்டாலும் அதை முடியாது எனக்கூறாமல் உடனே வாங்கித் தந்துவிடுகிறார்.
அவருடையமனைவி ஃப்ராங்க்ளின் குடும்ப கஷ்டத்தையும் சூழ்நிலையையும் புரியவைத்து மகளை வளர்க்க வேண்டும் என்று முருகதாஸுக்கு அறிவுரை சொன்னாலும் அதைஏற்காமல் மகளை செல்லமாக வளர்க்கிறார்.
இந்நிலையில்பள்ளியில் உடன் படிக்கும் சக மாணவனின் பிறந்தநாள்விருந்திற்காக செல்லும் பிரதிக்ஷா, அந்த மாணவனின் பிரம்மாண்டமானபங்களாவை பார்த்து வியந்து தனக்கும் ஒருவீடு வாங்கி கொடுக்க வேண்டும்என்று தனது தந்தையிடம் கேட்கிறார்.
தனது மகள் விரும்பியதை இல்லைஎன்று சொல்லி ஏமாற்ற மனம்இல்லாத முருகதாஸ் வீடு வாங்கி கொடுப்பதாகஉறுதியளிக்கிறார்.
தன் பிறந்த நாளைநாம் வாங்கும் வீட்டில்தான் கொண்டாட வேண்டும் எனமுருகதாஸிடம் பிரதிக்ஷா அடம் பிடிக்க நிச்சயமாகஉனக்காக நான் வாங்கும் வீட்டில்தான்பிறந்த நாள் கொண்டாடலாம் என மீண்டும்உறுதியளிக்கிறார் முருகதாஸ்.
முடிவில் மகளின்ஆசைப்படும் வீட்டை தந்தை முருகதாஸ்வாங்கினாரா ? இல்லையா? என்பதுதான் ’ராஜாமகள்’ படத்தின் கதை.
கதை நாயகனாக நடித்துள்ளஆடுகளம் முருகதாஸ் இயல்பான நடிப்பில் நடுத்தர வர்க்க குடும்ப தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். மகள் மீது அளவுகடந்த பாசத்தை வெளிக்காட்டும் உணர்ச்சிமயமானகாட்சிகளிலும் , மகளின் ஆசையை நிறைவேற்றமுடியாமல் தன் நிலையை நினைத்து கதறும் காட்சிகளிலும் உணர்வுபூர்வமானநடிப்பின் மூலம் குணசித்திர நடிகராக படம் முழுவதும் வாழ்கிறார் முருகதாஸ்.
முருகதாஸின் மனைவியாக நடித்திருக்கும் ஃப்ராங்க்ளின் குடும்ப பெண்ணாக நடிப்பில்இயல்பு .
குழந்தையாகநடித்துள்ள பிரதிக்ஷா சுட்டித்தனமான மிகவும் பாராட்டதக்க விதத்தில் நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.
கதைக்களத்திற்கு பலமாக முருகதாஸின் நண்பராக வரும் பக்ஸ்பகவதி பெருமாள்
நிக்கிகண்ணனின் ஒளிப்பதிவும் , ஷங்கர் ரங்கராஜனின் இசையும்படத்திற்கு பக்க பலம் !
தன் பிள்ளைகளை ராஜா போன்று வளர்க்க ஆசைப்படும் நடுத்தர வர்க்க தந்தையின் உணர்வுபூர்வமான கதையை ரசிக்க வைக்கும் திரைக்கதையுடன் வாடகைவீட்டில் வசித்து சொந்த வீடு வாங்கமுடியாமல் கனவுகனவாகவே போய்கிறதே என தினம் தினம்ஏங்கும் தந்தையின் வலியை அழுத்தமான காட்சிகளின் மூலம் அழகாக வெளிப்படுத்தி குடும்பத்துடன் அனைவரும்ரசிக்கும்படியான படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹென்றி.ஐ.
ரேட்டிங் ; 3 . / 5
留言