தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் உதயநிதிஸ்டாலின் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான ஞான சம்பந்தத்தின் மகளான ஆத்மிகாவை காதலிக்கிறார்.
இவர்களது காதல் ஞான சம்பந்தத்திற்கு தெரிய வர உதயநிதி ஸ்டாலினை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அடுத்த வீடு கிடைக்க சிரமப்படும் உதயநிதி ஸ்டாலின் ரூம்மெட்டாக பிரசன்னா இருக்கும் வீட்டில் தங்குகிறார் .
வீட்டிற்கு வந்த அதே நாள் இரவில் உதயநிதி ஸ்டாலினை பிரசன்னா மது பாருக்கு அழைக்க,,, தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை,,, இருந்தாலும் உங்களுக்காக நான் வருகிறேன் என மது அருந்தும் பழக்கம் உள்ள நண்பன் சதீஷ் இவர்களுடன் இணைகிறார் உதயநிதி ஸ்டாலின்.
மூவரும் மது பாருக்கு சென்ற நேரத்தில் கார் ஓட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பூமிகாவை இரவு நேரத்தில் வீட்டில் கொண்டு விட்டு உதவி செய்கிறார் உதயநிதி ஸ்டாலின் .
உதவி செய்ததற்கு கைமாறாக மழை பெய்து கொண்டிருப்பதால் அவர் தனது காரை கொடுத்து காலையில் கொண்டு வாருங்கள் என்று அனுப்புகிறார்.
அவர் சொன்னபடியே காரை கொண்டு செல்லும் உதயநிதி ஸ்டாலின் காலையில் காரை எடுக்கச் செல்லும் போது காரின் டிக்கியில் பூமிகா பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
இறுதியில் உதயநிதி ஸ்டாலின் பூமிகாவை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடித்து போலீசிடம் ஒப்படைத்தாரா ? இல்லையா? என்பதே ’கண்ணை நம்பாதே’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் தான் செய்யாத குற்றத்திற்கு போராடும் இளைஞனாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் எதார்த்த நடிப்பில் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்.
நாயகி ஆத்மிகாவிற்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் நடிப்பில் இயல்பு !
படத்திற்கு பக்க பலமாக பிரசன்னாவின் கதாபாத்திரம் !
படத்தின் வில்லனாக ஸ்ரீகாந்த். உதயநிதி ஸ்டாலினின் நண்பனாக சதீஷ், இரட்டை வேடங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் பூமிகா, சுபிக்க்ஷா, வசுந்தரா, மாரிமுத்து, சென்ராயன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
சித்து குமார் இசையில் அனைத்து பாடல்கள் கேட்கும் ரகம், கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை சூப்பர் !
ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !
சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லர் கதையை விறு விறுப்பாக அழுத்தமான திரைக்கதை அமைப்புடன் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத் துவம் கொடுத்து முடிவில் யாரும் யூகிக்க முடியாத திருப்புமுனையான க்ளைமாஸ்க் காட்சியுடன் தரமான க்ரைம் திரில்லராக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மு .மாறன் .
ரேட்டிங் ; 3.5 / 5
Kommentare