top of page

'கஸ்டடி' - விமர்சனம் !



ஒரு காவல் நிலையத்தில் நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை செய்கிறார் நாக சைதன்யா . ஒரு கட்டத்தில் உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்ற ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக முதலமைச்சரின் வாகனத்தையே நிறுத்தும் அளவுக்கு நேர்மையாக உள்ளார் நாக சைதன்யா .


இந் நிலையில் பள்ளி பருவத்திலிருந்தே கீர்த்தி ஷெட்டியை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு தடையாக கீர்த்தி ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள துடிக்கிறார் பிரேம்ஜி .


மறு புறம் கீர்த்தி ஷெட்டியின் பெற்றோர் காவல் நிலையத்தில் நாக சைதன்யா மீது புகார் தருமளவில் இருவரது காதல் பிரச்சனையாகிறது .


இந் நேரத்தில் கீர்த்தி ஷெட்டியை சந்திக்க இரவு நேரத்தில் நாக சைதன்யா சக காவலருடன் வண்டியில் செல்லும்போது எதிரே வேகமாக வரும் கார் இவர்கள் மீது மோதுகிறது .


தேடப்படும் குற்றவாளியான அரவிந்த் சாமியை , சி பி ஐ அதிகாரி சம்பத் கைது செய்யும் சமயத்தில் இவ் விபத்து நடக்க,,,,,,


தாதா வான அரவிந்த் சாமியையும் , சி பி ஐ அதிகாரி சம்பத்தையும் கைது செய்து காவல் நிலையத்தில் தன் கஸ்டடியில் வைக்கிறார் நாக சைதன்யா.


லாக்கப்பில் இருக்கும் சம்பத்தையும் அரவிந்த் சாமியையும் கொல்ல ஒரு கும்பல் காவல் நிலையத்தில் நுழைய கொலைகார கும்பலிடமிருந்து இருவரையும் காப்பாற்றுகிறார் நாக சைதன்யா.


சி பி ஐ கோர்ட்டில் ஒப்படைக்க நாக சைதன்யாவும் சம்பத்தும் அரவிந்த் சாமியை தனியே அழைத்து செல்ல ,,,,முதலமைச்சரின் ஊழல் வழக்குக்கு எதிராக சாட்சி சொல்ல இருக்கும் அரவிந்த் சாமியை போட்டு தள்ள உயர் அதிகாரி சரத்குமாருக்கு மேலிடம் உத்தரவு பிறப்பிக்கிறது ,


அரவிந்த்சாமியை கண்டுபிடித்து என்கவுண்டரில் சுட்டு கொல்வதற்காக சரத்குமார் தனி படையுடன் அவர்களை தேடி விரைகிறார் .


முடிவில் முதலமைச்சரின் ஊழல் வழக்குக்கு எதிராக சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு அரவிந்த்சாமி வந்தாரா ?


நாக சைதன்யா அரவிந்த்சாமியை சி பி ஐ கோர்ட்டில் சட்டத்தின் முன்னால்

ஒப்படைத்தாரா ?


முதலமைச்சரின் உததரவின்படி என்கவுண்டரில் அரவிந்த்சாமியை சரத்குமார் சுட்டு கொன்றாரா ? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் 'கஸ்டடி'


நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் நாக சைதன்யா, காதல் காட்சிகளில் காதல் நாயகனாகவும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாகவும் நடிப்பில் பாராட்டும்படி அசத்துகிறார் !


காதலியாக வரும் நாயகி அழகான கீர்த்தி ஷெட்டி ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் இயல்பு !


படத்திற்கு பக்க பலமாக மாஸ் வில்லனாக அரவிந்த்சாமி நடிப்பில் ரசிக்க வைக்கிறார் .

முதலமைச்சராக பிரியாமணி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவா ,சரத்குமார், சம்பத், பிரேம் ஜி, ராம்கி, வெனிலா கிஷோர் ,ஜெய பிரகாஷ், ரவிபிரகாஷ் ,பிரேமி விஸ்வநாத், சாய் ஶ்ரீநிவாஸ், கோபு ராஜு ரமணா,

காதம்பரி கிரண் ,நிஹாரிகா. தன்வி என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரது இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல் .


கதையின் வேகத்திற்கு இணையான எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு.


நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் எதிர்கொள்ளும் சம்பவங்களை கதையாக கொண்டு ,,, மிரட்டலான திரைக்கதை அமைப்புடன்,,, நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணிக்குமளவில் காட்சிகள் அமைத்து,,,ஆக்க்ஷனை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக மாஸ் ஆக்க்ஷன் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு .


ரேட்டிங் ; 3 . / 5






Yorumlar


bottom of page