top of page

'சிறுவன் சாமுவேல்' - விமர்சனம் !


பள்ளி பருவ சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நெருங்கிய நண்பர்களான இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக,,,,,, பேட் வாங்க கூட கையில் காசு இல்லாததால் மரக்கட்டையில் செய்த பேட்டினால் விளையாடி வருகின்றனர்


உடன் விளையாடும் வசதியான பையன் வைத்திருக்கும் பேட்டை பார்த்து கிரிக்கெட் பேட் மீது ஆசை கொள்ளும் சாமுவேல், எப்படியாவது தரமான பேட் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறான்.


ஒரு கட்டத்தில் வசதியான பையன் விளையாடும் பொருளை சாமுவேல் திருடி விட ,,,அவனுடைய நண்பன் ராஜேஷு மீது அந்த திருட்டு பழி விழுகிறது.


ஒன்றுமே செய்யாத ராஜேஷ் மீது திருட்டு பழி வந்ததற்கு காரணமான சாமுவேல் அதனை கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பேட் வாங்க காசு சேர்ப்பதற்கு போராடுகிறான் .


இதனிடையில் ஒரு நிகழ்ச்சியில் தங்க மோதிரம் காணாமல் போக அந்த பழியும் ராஜேஷ் மீது சுமத்தப்பட்டு அனைவரது முன்னிலையிலும் அவமானப்பட்டு அழுகிறான் .


முடிவில் காணாமல் போன விளையாடும் பொருளை எடுத்தது ராஜேஷா? அல்லது சாமுவேலா?


கிரிக்கெட் பேட் வாங்க பாடுபட்ட சாமுவேல் அந்த பேட்டை வாங்கினானா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'சிறுவன் சாமுவேல்'


ரசிகர்கள் பரிதாபப்படும்படி அப்பாவி முகத்துடன் நண்பனாக நடித்துள்ள கே.ஜி.விஷ்ணு வரும் அனைத்து காட்சிகளிலும் அவன் நடிப்பதே தெரியாமல் கதாபாத்திரம் மட்டுமே தெரியுமளவில் இயல்பான நடிப்பில் பாராட்டும்படி நடித்துள்ளான்.


சாமுவேல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுவன் அஜிதன் தவசிமுத்து

முக பாவனைகளிலே அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளான்.


சிறுவர்கள், பெற்றோர்கள் என நடித்துள்ள நடிகர், நடிகைகள், டியூசன் டீச்சராக நடித்திருக்கும் பெண் என அனைவரும் இயல்பான நடிப்பில் நடித்திருப்பது படத்திற்கு சிறப்பு !


ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தியின் தரமான ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை !

எஸ்.சாம் எட்வின் மனோகர் - ஜே..ஸ்டாண்ட்லி ஜான் ஆகியோரின் இசையில் இரைச்சல் இல்லாமல் கதைக்கேற்றபடி இசையமைத்துள்ளனர்.


வழக்கமான கதைகளை படமாக பார்க்கும் ரசிகர்களின் மத்தியில் சிறுவர்களின் வாழ்வியலை எதார்த்தமான கதையாக சொல்லி,,,, நடித்த நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும் அவர்களை கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணிக்குமளவில் காட்சிகள் அமைத்து,,,கதையின் தன்மை மாறாத திரைக்கதையுடன் நாகர்கோவில் வட்டார தமிழ் வசனங்களுடன்,,,,, இப் படம் பல விருதுகளை வென்றாலும் மேலும் சிறந்த விருதுகளை பெற போகும் படமாக மண்ணின் மணம் மாறாமல் இயல்பான படத்தை படமாக்கிய இயக்குனர் இயக்குநர் சாது ஃபெர்லிங்டனின் திறமையை மனதார பாராட்டலாம் !!

ரேட்டிங் ; 3.5 / 5

bottom of page