top of page
mediatalks001

'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் ' ('ஆஹா' தமிழ் ஓடிடி) - விமர்சனம் !


அனாதை ஆசிரமத்தில் ஆதரவற்றவர்களாக வரலட்சுமி சரத்குமார் ,சந்தோஷ் பிரதாப் ,மஹத் , யாசர் ,விவேக் ராஜகோபால் சிறிய வயதிலிருந்து ஒன்றாக வளர்கின்றனர் .

இவர்களில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக பணிபுரிகிறார் .


இதில் மஹத்தும் வரலட்சுமி சரத்குமாரும் காதலர்களாக இருக்கும் நிலையில்,, இரவு நேரத்தில் பள்ளி மாணவியை ஒரு கும்பல் பலவந்தமாக தூக்கி செல்வதை பார்த்து மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அமித் பார்கவிடம் மஹத் புகார் கொடுக்க ,, அமித் பார்கவ் சம்பவம் நடந்த இடத்துக்கு உடனே மஹத்துடன் செல்ல ,,, அங்கு பள்ளி மாணவியை கடத்திய தாதா சுப்பிரமணிய சிவாவும், இன்ஸ்பெக்டர் அமித் பார்கவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதை பார்த்த மஹத் உயிருக்கு பயந்து தப்பி ஓடும்போது சுப்பிரமணிய சிவாவின் ஆட்களால் தாக்க ப்பட்டு கொல்லப்படுகிறார் .


மஹத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் வரலட்சுமி சரத்குமார் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் 'எல்லைக்குள் காணாமல் போனதை முதலில் தெரிந்து கொண்டு நண்பர்கள் உதவியுடன் தாதா சுப்பிரமணிய சிவாவும், இன்ஸ்பெக்டர் அமித் பார்கவும் சேர்ந்து மஹத்தை கொலை செய்ததை கண்டுபிடிக்கிறார் .


காதலன் மஹத்தை கொன்ற இன்ஸ்பெக்டர் அமித் பார்கவை பழி தீர்க்க மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வரும் வரலட்சுமி சரத்குமார்,,, தன் நண்பர்கள் துணையுடன் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே இன்ஸ்பெக்டர் அமித் பார்கவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல திட்டம் தீட்ட ,,,,அந்த சமயத்தில் சுப்பிரமணிய சிவா அமித் பார்கவை சந்திக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வர,,,, முடிவில் வரலட்சுமி சரத்குமார் திட்டமிட்டபடி,,,, மஹத்தின் நண்பர்கள் இன்ஸ்பெக்டர் அமித் பார்கவை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் '



போலீஸ் அதிகாரியாக வரும் வரலட்சுமி சரத்குமார் ,, காதலன் மஹத்தை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்க துடிக்கும் அர்ச்சனாவாக அமைதியான நடிப்பில் இயல்பாக நடித்திருக்கிறார் .


நண்பர்களாக நடிக்கும் மஹத் , சந்தோஷ் பிரதாப் ,யாசர் ,விவேக் ராஜகோபால் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் .


முக்கிய கதாபாத்திரத்தில் விசாரணை அதிகாரியாக வரும் ஆரவ் ,,, ஸ்டைலிஷாக ஆர்ப்பாட்டமில்லாத உதவி கமிஷனராக ,,,, ரசிக்கும்படியான நடிப்பில் அசத்துகிறார் .


அமித் பார்கவ் , சுப்பிரமணிய சிவா , யாஷ் ஷெட்டி , ரவி வெங்கட்ராமன் ,ஸ்ருதி நாயக் ,பாலாஜி ,சந்திரா சுட் என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


இசையமைப்பாளர் மணிகாந்த் கதிரியின் இசையில் பாடல்களும் கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையும் மிரட்டல் !!

படத்திற்கு பக்க பலமாக சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு !



நண்பனை கொன்றவர்களை கொல்ல திட்டம் வகுக்கும் நண்பர்கள் .. திரில்லிங் கலந்த கதையுடன் ரசிக்கும்படி நேர்த்தியான திரைக்கதை அமைப்புடன் ,யாரும் யூகிக்க முடியாத திருப்புமுனையான காட்சிகளுடன் ,,, நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணிக்குமளவில் காட்சிகள் அமைத்து,,,சஸ்பென்ஸ் நிறைந்த மாஸான க்ரைம் படமாக ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகும் இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தயாள் பத்மநாபன் .


ரேட்டிங் ; 3.5 / 5




Comments


bottom of page