top of page

ஏழ்மையில் கலங்கும் மக்களின் காவலன் !'பிச்சைக்காரன் 2' - திரைப்பட விமர்சனம் !

Updated: May 27, 2023movie ; ' pichaikkaran 2 '

Director, Music Director & Editor : Vijay Antony

Casting ; Vijay Antony, Kavya Thapar, shila rajkumar ,Dato Radha Ravi, Y Gee Mahendran, Mansoor Ali Khan, Hareesh Peradi, John Vijay, Dev Gill, Yogi Babu

Production House : Vijay Antony Film Corporation

Producer : Fatima Vijay Antony

Line Producer : Sandra Johnson

Executive Producer : Naveenkumar.D

Cinematographer : Om Narayan


இந்திய அளவில் மிக பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இந்திய இளம் தொழிலதிபராக விஜய் ஆண்டனி இருக்கிறார்.


அவரது நண்பர்களான தேவ் கில் , ஜான் விஜய் , டாக்டர் ஹரிஷ் பேராடி துணையுடன் விஜய் ஆண்டனி சிறந்த தொழில் அதிபராக விளங்க ,,,, விஜய் ஆண்டனியின் காதலியாகவும் தனிப்பட்ட செயலாளராகவும் நாயகி காவ்யா தாப்பர் இருக்கும் நிலையில் ,,,,


நண்பர்கள் மூவரும் மூளை மாற்று அறுவை சிகிச்சையில் கை தேர்ந்த நிபுணரான டாக்டர் ராஜா கிருஷ்ணமூர்த்தியை கொண்டு மூளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் தாங்கள் சொல்வதை கேட்டு செயல்படும் புதிய விஜய் ஆண்டனியாக கோடிக்கணக்கான பணத்திற்கு ஆசைப்பட்டு தன் நண்பனை மாற்ற சதி திட்டம் தீட்டுகின்றனர் .


மறு பக்கம் விபத்தில் பெற்றோரை இழந்து சிறு வயதில் பிச்சையெடுத்து தன் தங்கையை காப்பாற்றும் விஜய் ஆண்டனி சதி கும்பலின் செயலால் தன் தங்கையை தொலைத்து விட ,,,சில வருடங்களுக்கு பின் இதற்கு காரணமான நபரை கொலை செய்ததால் குற்றவாளியாக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வளர்கிறார்.


சிறையிலிருந்து விடுதலையான பின் தங்கையை தேடி அலையும் நேரத்தில் ,, கோடீஸ்வர விஜய் ஆண்டனியின் நண்பர்கள் எதிர்பார்க்கும் மூளையானது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் பிச்சைக்கார விஜய் ஆண்டனியின் ரத்த மாதிரியுடன் சரியாக இருக்கிறது.


பணத்திற்கு ஆசைப்படும் அரசு டாக்டர்,,தெருவில் தூங்கி கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியை கடத்தி ,,, கோமா நிலையிலுள்ள அவரது உடலை பணக்கார விஜய் ஆண்டனியின் மூளை மாற்று அறுவை சிகிச்சைக்காக துபாய்க்கு அனுப்புகிறார் .


பணக்கார விஜய் ஆண்டனியின் உடலில் கோமா நிலையிலிருக்கும் விஜய் ஆண்டனியின் மூளை வெற்றிகரமாக பொருத்தப்பட,,, நண்பர்கள் எதிர்பார்க்கும் கோடீஸ்வர விஜய் ஆண்டனி சிகிச்சை பலனில் கண் முழிக்கிறார் ..


சில நாட்களுக்கு பின் நண்பர்களின் சதி திட்டங்களுக்கு எதிராக செயல்படும் விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் மூவரையும் கொலை செய்து நடு கடலில் வீசுகிறார் .


எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் மிக பெரிய பணக்காரனாக உருமாறும் விஜய் ஆண்டனி 'ஆண்டி பிகிலி' என்ற பெயரில் ஏழ்மையில் கஷ்டப்படும் மக்களுக்கான தொழில் வர்த்தகத்தை தொடங்குகிறார் .


இந் நேரத்தில் விபத்தில் பயணிகள் விமானம் ஒன்று நடுக்கடலில் மூழ்க ,,, போலீசார் விபத்தில் பலியானவர்களை தேடும்போது கொலையான தேவ் கில் , ஜான் விஜய் ,டாக்டர் ஹரிஷ் பேராடி உடல்கள் போலீசாரிடம் சிக்கி கொள்ள ,,,, கொலைகளின் தகவலறிந்த முதலமைச்சர் ராதாரவிவிஜய் ஆண்டனியை விசாரிக்க உத்தரவிடுகிறார்.


முடிவில் தான் செய்த கொலைகளை விஜய் ஆண்டனி போலீசாரின் விசாரணையில் ஒத்து கொண்டாரா ?

காணாமல் போன விஜய் ஆண்டனியின் தங்கை மீண்டும் கிடைத்தாரா ? இல்லையா ? எனபதை சொல்லும் படம்தான் 'பிச்சைக்காரன் 2'


கதையின் நாயகனாக நடித்துள்ள விஜய் ஆண்டனி இப் படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்து இப் படத்தை இயக்கியுள்ளார் .

நீண்ட வருடங்களுக்கு பிறகு 'முள்ளும் மலரும்' படத்திற்கு பின் அண்ணன் - தங்கை பாசத்தை உணர்வுபூர்வமான கதையில் வெளிப்படுத்தி,,, அழுத்தமான திரைக்கதையில் ஒவ்வொரு காட்சிகளையும் மிக கவனமாக கையாண்டு ,,,,, மனதால் ஈர்க்கப்படும் உயிரோட்டமான வசனங்களுடன்,,,,

சாதாரண காட்சிகளும் பிரம்மாண்ட காட்சிகளாக எடுக்கப்பட்டு ,,, சிறப்பான

எடிட்டிங் பணியுடன் ,,,,இசையில் கேட்க வைக்கும் பாடல்களும் ,, கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையும்,,,, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்காத நேரத்தில் படத்தின் முடிவில் காணாமல் போன தங்கை திரையில் தோன்றும்போது மனதளவில் படம் பார்க்கும் ரசிகர்கள் காட்சிகளால் கண் கலங்கும்படி நடிப்பிலும் ,,,,,,,,இசையிலும்,,,,, , எடிட்டிங்கிலும் திறமையான கலைஞனாக ,,, பாராட்டப்படும் இயக்குனராக இப் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் விஜய் ஆண்டனி !


நாயகியாக காவ்யா தாப்பர் கதைக்கேற்றபடி உணர்ச்சிமயமான காட்சிகளில் நடிப்பில் இயல்பாகவும் , ஒரு பாடலில் ரசிக்கும்படியான கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைக்கிறார் !


மிரட்டும் வில்லன்களாக தேவ் கில் , ஜான் விஜய் ,டாக்டர் ஹரிஷ் பேராடி,,,,,

ராஜா கிருஷ்ணமூர்த்தி ,யோகி பாபு ,ராதாரவி ,மன்சூரலிகான் ,ஒய் ஜி மகேந்திரா , படத்தின் முக்கிய பாத்திரமாக தங்கையாக நடிக்கும் ஷீலா ராஜ்குமார் என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


படத்திற்கு பக்கபலமாக ஓம் நாராயணனின் ஒளிப்பதிவு !


ரேட்டிங் ; 4 . / 5


bottom of page