கேரளாவில் 2018ம் ஆண்டில் இயல்பு வாழ்க்கை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்,,,,, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பிரச்சனையாக மீனவ குடும்பத்தை சேர்ந்த வாலிபன் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்கிறான். இவர்களின் காதலால் பெண்ணின் தந்தை மீனவ குடும்பத்தை அவமதிக்கிறார் .
வெளிநாட்டிலிருந்து கேரளாவின் அழகை ரசிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்திருக்கும் தம்பதி, மனைவிக்கு டைவர்ஸ் தரச் சொல்லி மாப்பிள்ளையை வற்புறுத்தும் மாமனார், கிரகப் பிரவேச புதிய வீட்டிற்கு
குடி போக தயாராகும் அரசு அதிகாரி , தொழிலாளர் பிரச்சனையால் தொழிற்சாலைக்கு வெடிகுண்டு வைக்க குண்டுகள் எடுத்துச் செல்லும் ஒரு லாரி டிரைவர் என வித விதமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க ,,,,இச் சமயத்தில் அந்த ஊரில் மழை விடாமல் பெய்வதால் மாநிலம் முழுவதுமே வெள்ளத்தில் முழ்குகிறது.
பெருமழை அபாயத்தில் வெள்ளத்தில் நிரம்பி வழிந்த அணை திறக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி கொள்கின்றனர் .
வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கையை இழந்த மக்களை காப்பாற்ற கேரள அரசாங்கமே திணறி கொண்டிருக்கும் நிலையில் மீனவ மக்கள் தங்கள் படகுகளுடன் உயிரை பணயம் வைத்து மனித நேயத்துடன் ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றுகின்றனர்.
முடிவில் இயற்கை பேரழிவான வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மனிதர்கள் அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதை மனதை மிரள வைக்கும் மழை வெள்ளக் காட்சிகளுடன் எடுக்க ப்பட்ட இயல்பான படம்தான் '2018'
மன வளர்ச்சியில்லாத மகனுடன் வீட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் கணவன் மனைவியை காப்பாற்ற குஞ்சக்கோ போபன் வெள்ளத்தில் படகுடன் வந்து அவர்களை காப்பாற்ற போராடுவது படம் பார்க்கும் ரசிகர்களே மிரண்டு போகுமளவில் அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது
கேரள தொழிற்சாலையை தகர்க்க வெடிகுண்டு எடுத்துச் செல்லும் லாரி டிரைவர், மனம் மாறி அந்த வெடி குண்டு பெட்டியை வெள்ளத்தில் வீசுவதும் , தன் குழந்தைக்கு வாங்கிச் சென்ற பொம்மையை லாரியில் பயணம் செய்தவர் அந்த டிரைவரின் மகளுக்காக விட்டுச் செல்வதும் மனதை தொடும் காட்சிகள்.
டொவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, லால், வினீத் சீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி என அனைத்து நட்சத்திரங்களும் கதையுடன் இணைந்து கதாபாத்திரங்களுடன் பயணித்திருப்பது படத்தின் சிறப்பு !
இதில் முக்கியமாக லால்,.குஞ்சக்கோ கோபன், நரேன் மூவரும் படம் முழுவதும் முழுக்க மழையில் நனைந்தபடியே நடித்துள்ளனர் .
அகில் ஜார்ஜின் பாராட்டும்படியான ஒளிப்பதிவில் மழை வெள்ளக் காட்சிகள் அற்புதம் !!
படத்துக்கு பக்க பலமாக சிறப்பான விஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் !
இசை அமைப்பாளர் நோபின் பால், வில்லியம் பிரான்சிஸ் இசையில் கதையின் வேகத்திற்கு இணையான இசை மிரட்டல் !
எவருமே படமாக்க தயங்கும் கதையை த்ரில்லர் படம்போல மிக கவனமாகக் கையாண்டு,,,,, மிரள வைக்கும் திரைக்கதை அமைப்புடன் ,,,நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணிக்குமளவில் காட்சிகள் அமைத்து,,,இயற்கை பேரழிவுக்கு முன் மனித நேயமே மகத்தானது என்ற கருத்துடன் படத்தை ரசிக்கும் அனைவரும் பாராட்டும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜூடே ஆண்டனி ஜோசப்.
ரேட்டிங் ; 4. / 5
Comments