top of page

'தீராக் காதல்' - விமர்சனம்!


திருமணமான ஜெய் மனைவி ஷிவதா மற்றும் குழந்தை வ்ரித்தி விஷாலுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நேரத்தில் வேலை நிமித்தமாக மங்களூருக்கு ரயிலில் செல்ல,,,,, அதே ரயிலில் ஜெய்யின் முன்னாள் காதலி ஐஷ்வர்யா ராஜேஷும் வேலை காரணமாக மங்களூருக்கு பயணிக்கிறார் . இரவு நேரத்தில் காபி குடிக்க ரயில் நிலையத்தில் இறங்கும் ஜெய் முன்னாள் காதலி ஐஷ்வர்யா ராஜேஷை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார்.


மங்களூருக்கு செல்லும் இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு முன்னாள் காதலர்களாக அடிக்கடி சந்தித்து கொள்ள,,, கொடுமைக்கார கணவனிடம் தான் அடிமைப்பட்டு வாழ்வதையும்,,,தன் பெற்றோரும் தனக்கு ஆறுதலாக இல்லாமல் தினமும் சண்டையே வாழ்க்கையாக வாழ்வதை ஐஷ்வர்யா ராஜேஷ் ஜெய்யிடம் விவரிக்க ஜெய்யின் ஆறுதலான வார்த்தைகளினால் ,,,,, பழைய நினைவுகளில் மூழ்கும் ஐஷ்வர்யா ராஜேஷ் மீண்டும் ஜெய்யை மனதார காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் சென்னை திரும்பும் ஜெய் இனி மேல் நமக்குள் எந்த தொடர்பும் வேண்டாம் ,, சென்னை வந்தாலும் என்னிடம் பேச வேண்டாம் என தன் குடும்ப வாழ்க்கையை நினைத்து விலகிக்கொள்கிறார் ,,,,


சென்னை வந்த ஐஷ்வர்யா ராஜேஷ் கணவனிடம் ஏற்படும் சண்டையில் திருமண பந்தத்தை முறித்து கொண்டு ,,,,, ஜெய் மேல் கொண்ட காதலால் கணவனை விவாகரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட ,,,,

ஜெய்யுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் ஐஷ்வர்யா ராஜேஷ் ஜெய் குடியிருக்கும் எதிர் பிளாட்டுக்கே வந்து விடுகிறார்.


விடாமல் துரத்தும் ஐஷ்வர்யா ராஜேஷ் நேரிலும் ,போனிலும் ஜெய்யை தொடர்பு கொண்டு மனைவி ,,மகளை விட்டு பிரிந்து தன்னுடன் புதிய வாழ்க்கை வாழ வற்புறுத்தும் நிலையில்,,,


ஐஷ்வர்யா ராஜேஷால் குழப்பத்தின் உச்சத்துக்கே செல்லும் ஜெய்,,,,


முடிவில் ஐஷ்வர்யா ராஜேஷால் ஏற்படும் பிரச்சனை ஜெய்யின் மனைவியான ஷிவதாவிற்கு தெரிந்ததா ?


ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ நினைக்கும் ஐஷ்வர்யா ராஜேஷிடம் இருந்து ஜெய் தப்பித்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'தீராக் காதல்'


நாயகனான ஜெய் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் கதையுடன் பயணித்து கதாபாத்திரத்துடன் இணைந்து அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்


முன்னாள் காதலியாக வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் படம் முழுவதும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் . அவர் நடித்த சிறந்த படங்களில் இந்த படமும் அமைய போவது உறுதி !


ஜெய்யின் மனைவியாக ஷிவதா கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் மிளிர்கிறார் !


ரசிகர்களே வெறுக்குமளவில் இயல்பான நடிப்பில் அசத்துகிறார் அம்ஜத்கான். கொடுமைக்கார கணவனாக ஐஷ்வர்யா ராஜேஷை அடித்து துன்புறுத்தும் அம்ஜத்கானை ஒரு காட்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் கன்னத்தில் அறையும்போது மே மாத வெயிலில் படம் பார்க்கும் ரசிகர்களின் மனது குளிர்ச்சியாகிறது .


சிறப்பான நடிப்பில் நண்பனாக அப்துல் லீயும் ,, மகளாக நடிக்கும் வ்ரித்தி விஷாலும் !


இசையமைப்பாளர் சித்து குமாரின் இசையும்,,,, ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !!


சில வருடங்களுக்கு பின் முன்னாள் காதலியை சந்திக்கும் திருமணமான நாயகன் ,,,, முன்னாள் காதலியை சந்திப்பதால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனையான நிகழ்வுகள் ,,,,இந்த இயல்பான உணர்வுபூர்வமான கதையை கொண்டு,,, ரசிக்கும்படியான திரைக்கதை அமைப்பில் ,,,,மனதை வருடும் G. R. சுரேந்தர்நாத் வசனங்களுடன் நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணிக்குமளவில் காட்சிகள் அமைத்து,,

படம் பார்க்கும் ரசிகர்கள் தங்களது தோல்வியடைந்த முன்னாள் காதலை நினைக்கும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.


சிறந்த படங்களை வெளியிடும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் லைகா productions சார்பில் இப் படத்தை தயாரித்துள்ளார்.


ரேட்டிங் : 4 / 5


bottom of page