top of page

'வீரன்' - விமர்சனம் !



எல்லையில் காவல் தெய்வமாக இருக்கும் 'வீரன்' சாமியை தெய்வமாக வழிபடும் கிராமத்தில் வாழும் ஹிப்ஹாப் ஆதியை,,,,,, சிறுவயதில் நண்பர்களுடன் பள்ளிக்கு சென்று திரும்பும் வழியில் வீரன் சாமி கோவிலின் அருகில் வரும்போது மின்னல் தாக்கி விடுகிறது.


மின்னல் தாக்கியதில் சுயநினைவை இழந்து விடும் ஆதியை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அவரது அக்கா அழைத்து செல்ல...... சிகிச்சை பலனில் குணமடைந்து அங்கேயே வாழ்ந்து வருகிறார்.இவரை தாக்கிய மின்னலால் ஆதிக்கு சூப்பர் சக்தி கிடைக்கிறது


இந்நிலையில் ஆதி வாழ்ந்த கிராமத்தில் விஞ்ஞானி வினய்யின் திட்டத்தில் மின்சார கேபிள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில்,,,,


வினய்யின் திட்டத்தினால் கிராமமே வெடித்து சிதறுவது போன்று ஆதியின் கனவில் தோன்றுகிறது.


வெடித்து சிதற இருக்கும் கிராமத்திலுள்ள மக்களை காப்பாற்ற ஆதி ஊருக்கு வருகிறார் .


ஆதியின் சக்தியை பற்றி ஆதியுடன் இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் தெரியும் நிலையில்,,,,,,

வீரன் கோவிலை இடித்து பூமிக்கு அடியில் கேபிளை பதிக்க வினய்யின் அடியாட்கள் முயற்சி செய்யும் நேரத்தில் . கிராமத்தில் இருக்கும் மக்களை திரட்டி தனக்கு கிடைத்த சக்தியை வைத்து வினய்யின் சதி

திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார் ஆதி.


வீரன் கோவிலை இடிக்க நினைத்த வினய்யின் சதியை முறியடித்து ஆதி வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'வீரன்'


சூப்பர் சக்தி கொண்ட நாயகனாக ஹிப்ஹாப் ஆதி அமைதியான நடிப்பில் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.


நாயகியாகஅறிமுக நடிகை ஆதிரா ராஜ் ஹிப்ஹாப் ஆதியின் காதலியாக கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !


வில்லனாக மிரட்டும் வினய், ஆதியின் நண்பனாக யூடியூபர் சசி, முனிஷ்காந்த், காளி வெங்கட் ,முருகானந்தம் என படத்தில் நடித்திருக்கும் அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !


ஹிப்ஹாப் ஆதியின் இசையும்.. தீபக் டி மேனனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


கிராமத்து சமூக பிரச்சினையில் மக்களை காப்பாற்றும் சூப்பர் சக்தி படைத்த நாயகனின் கதையை மையமாக கொண்டு அழுத்தமில்லாத திரைக்கதையின் தொய்வினாலும் ,,, வேகம் குறைந்த காட்சிகளினாலும் ,,,சொல்ல வந்த கதையை வழக்கமான பாணியில் சொல்வதை தவிர்த்து ,,,விறு விறுப்பான ரசிக்கும்படியான திரைக்கதையில்,,,, சூப்பர் சக்தி படைத்த நாயகனின் சாகசங்களை குழந்தைகளுக்காக காட்சிகளில் அதிகப்படுத்தி கவனம் வைத்து இயக்குனர் இயக்கியிருந்தால் கோடைவிடுமுறையில் குடும்பத்துடன் அனைவரும் கொண்டாடும் ஆங்கில படங்களுக்கு நிகரான படமாக இயக்குனர் ஏஆர்கே .சரவனுக்கு இந்த படம் அமைந்திருக்கும் .


ரேட்டிங் ; 2 . 5 / 5




bottom of page