top of page

'விமானம்' - விமர்சனம் !


ஊனமுற்ற சமுத்திரகனி கழிவறை நடத்தி அதில் வரும் வருமானத்தில் தனது மகன் துருவனை பள்ளியில் படிக்க வைக்கிறார் .


விமானத்தின் மேல் அதிக பற்று கொண்ட துருவன் பெரியவனானதும் எப்படியாவது விமான பைலட்டாக்கி விட வேண்டும் என்ற கனவில் இருக்கிறான்.

இந் நேரத்தில் திடீரென மயக்கமடைந்து விழும் துருவனை பரிசோதிக்கும் டாக்டர் துருவனுக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர் .


துருவன் சில காலமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் தெரிவிக்க,,,,. தனது மகன் இறப்பதற்கு முன்பு ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்க வைத்து அவனது ஆசை கனவை நிறைவேற்றி விட வேண்டும் என்று சமுத்திரகனி நினைக்கிறார்.


பொருளாதார சிக்கலில் வாழ்க்கையை நடத்தி வரும் சமுத்திரகனி தனது மகனின் ஆசையை நிறைவேற்ற . மகனுக்காக மரம் அறுக்கும் வேலையை செய்து பணத்தை சேர்க்க முயற்சிக்கிறார்.


இந் நிலையில் சமூத்திரகனி மீது திருட்டு பழி விழுந்து கிடைத்த வேலையும் பறி போகிறது.

மகனை விமானத்தில் பயணிக்க வைக்க பணத்திற்காக போராடும் சமுத்திரகனி,,,

முடிவில் மகனின் ஆசையான விமானத்தில் பயணிக்க வைத்து அவனது ஆசையை சமுத்திரகனி நிறைவேற்றினாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'விமானம்'


ஊனமுற்ற ஏழை தகப்பனாக சமுத்திரகனி அழுத்தமான கதாபாத்திரத்தில் உணர்ச்சிமயமான குணசித்திர நடிப்பில் அற்புதமாக நடித்துள்ளார்.


தனது மகனின் பிரச்சனை தெரிந்து கண்கலங்கும் காட்சிகளிலும் அவனது விமான ஆசையை நிறைவேற்ற போராடும் காட்சிகளிலும் ரசிகர்களை உருக வைத்துள்ளார்.


மகனாக நடித்திருக்கும் துருவன் துறு துறு நடிப்பில் ரசிக்க வைக்கிறான் .


படத்தின் முடிவில் தோன்றும் மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .


இசையமைப்பாளர் சரண் அர்ஜுனின் இசையும் ஒளிப்பதிவாளர் விவேக் கலேபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


விமானத்தின் மீது அதிக பிரியம் கொண்ட மகனுக்கும் தந்தைக்கும் உள்ள அழகிய உணர்வுகளை கொண்ட கதையை ,,,,கதைக்கேற்ற திரைக்கதை அமைப்பில் மகனுக்காக தந்தைபடும் கஷ்டங்களை உணர்வுபூர்வமான காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தி ரசிகர்கள் ரசிக்கும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா பிரசாத் யென்னாலா.


ரேட்டிங் ; 3.5 / 5

©2020 by MediaTalks. 

bottom of page