மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட பாலு வர்க்கீஸ் அந்தி சாயும் நேரத்தில் குறைவான வெளிச்சத்தில் பார்வை தெரியாமல் வாழ்கிறார் .
இப் பிரச்சனையால் அவரது திருமணம் நின்றுவிடுவதோடு செய்யும் வேலையும் பறிபோகிறது.
வேலை பறி போனதால் சுயமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இந் நிலையில் அவரின் அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்க ஒரு குழு முன் வருகிறது.
அதே சமயம், புதிய கோவில் ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைக்க வேண்டும் என்று ஊர்வசியின் உறவினர்கள் முடிவு செய்கிறார்கள்.
பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை எடுத்து வீட்டின் வெளியே உள்ள ஓடாமல் இருக்கும் காரில் யாருக்கும் தெரியாமல் வைத்து விடுகிறார் பாலு வர்க்கீஸ்.
விநாயகர் சிலை மூலம் தனது வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பாலு வர்க்கீஸுக்கு அதே விநாயகர் சிலை மூலம் சில பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வர கலையரசனின் உதவியை கேட்கும் பாலு வர்க்கீஸ் முடிவில் கலையரசனின் துணையால் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா?
யாருக்கும் தெரியாமல் காரில் வைத்த விநாயகர் சிலையின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’
கதையின் நாயகனாக பாலு வர்க்கீஸ் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .
சார்ல்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
பாலு வர்க்கீஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி கடவுள் பக்தராக வழக்கமான இயல்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .
ஊர்வசியின் கணவராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் சுப்பிரமணியன் கே.வி-இன் இசையும் ,ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கடவுள் மனித வடிவில் உருவெடுத்து உதவி செய்யும் என்ற கருத்தை சொல்வதுடன் விநாயகர் சிலையை மையமாக வைத்து இன்றைய காலத்தில் ஆன்மீக தொழிலே பெரும் லாபம் தரும் தொழில் என்பதை வலியுறுத்தும் விதமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம்.
ரேட்டிங் ; 3 / 5
Kommentare