உடல் ரீதியாக மன நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் எஸ்.ஜே.சூர்யா துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பொம்மைகளுக்கு வர்ணத்தில் முக வடிவமைக்கும் வேலை செய்து வருகிறார்.
இந் நிலையில் அவர் வேலை செய்யும் இடத்தில் தாடையில் சிறிய தழும்புடன் பொம்மை ஒன்று வருகிறது.
பள்ளி பருவத்தில் மனதார காதலித்து தாயை போல தன்னை பார்த்து கொண்ட காதலியின் தாடையில் உள்ள தழும்பை நினைவூட்டுவது போன்று இருக்கும் இந்த பொம்மையை தனது காதலியாக நினைத்து வாழ ஆரம்பிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இந்த நேரத்தில் இந்த பொம்மை ஏற்றுமதி செய்யப்பட்டு வேறு ஒரு கடைக்கு விற்பனையாகி விடுகிறது. இதனால் கோபமடையும் எஸ்.ஜே.சூர்யா இதற்கு காரணமான மேலாளரை வெறித்தனமாக அடித்து கொலைசெய்து விடுகிறார். பின் பொம்மை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அந்த கடையிலே வேலைக்கு சேர்ந்து விடுகிறார்.
மேலாளர் கொலையான வழக்கை போலீஸ் விசாரித்து குற்றவாளி யார் என தெரியாமல் திணறி கொண்டிருக்கும் நேரத்தில்,,,,அந்த கடையில் எஸ்.ஜே.சூர்யா தன் காதலியாக உள்ள பொம்மையை தனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல திட்டம் போடுகிறார்.
ஒரு கட்டத்தில் கடையின் மேலாளர் அடிக்கடி எஸ்.ஜே.சூர்யா
பொம்மையுடன் பேசுவதை கண்டிக்கும்போது.... வெறித்தனமாகும் எஸ்.ஜே.சூர்யா அவரை அடித்து பந்தாடும்போது குற்றவாளியை தேடும் போலீசார் அங்கு வருகின்றனர் .
முடிவில் குற்றவாளியான எஸ்.ஜே.சூர்யாவை போலீசார் கைது செய்தார்களா ?
எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை காதலின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'பொம்மை'
கதையின் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா ரசிக்கும்படியான பல பரிமாண நடிப்பில் காதல் ,,, பயம்,,,, ,,மகிழ்ச்சி என சிறப்பாக ஒவ்வொரு காட்சிகளிலும் முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் முத்திரை பதிக்கிறார் .
பொம்மையாக வரும் பிரியா பவானி சங்கர் உயிருள்ள பொம்மையாகவே நந்தினி என்ற கதாபாத்திரத்திரமாக தனது நடிப்பில் வாழ்கிறார் .
கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கும் சாந்தினி ,,
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் தரம் !
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் ,,, பின்னணி இசை அசத்தல் !
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தாக தேனினும் இனிய தென்றலான ' தெய்வீக ராகம் ' பாடல்.
சிறு வயதில் மனதார விரும்பிய பெண் தொலைந்து போனதால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒருவனது கதையை மையமாக கொண்டு அழுத்தமான திரைக்கதை அமைப்பில் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் படம் முழுவதும் ரசிக்கும்படியான நடிப்பில் ரசிகர்களை தன் வசம் ஈர்க்கும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பாற்றலுடன் இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராதா மோகன் .
ரேட்டிங் ; 3 . / 5
Comments