எட்டு பாகங்களை கொண்ட தொடரின் விமர்சனம்!
நான்கு வருடங்களாக லிங்காவும் சாம்பிகாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர் .
காதலித்து திருமணம் செய்து கொண்ட சாம்பிகாவின் நெருங்கிய தோழியின் திருமண வாழ்க்கை முறிந்து இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
இந் நேரத்தில் தான் காதலிக்கும் சாம்பிகாவை திருமணம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார் லிங்கா.
தோழியின் நிலை பார்த்து தனக்கும் இதே நிலை ஏற்படுமா என குழப்பமடையும் சாம்பிகா , லிங்காவுடனான காதலை பிரேக் அப் செய்ய முடிவு செய்கிறார்.
இந்த முடிவு கேட்டு சந்தோசமாக சாம்பிகாவின் வீட்டுக்கு லிங்கா செல்ல, இருவரின் காதல் விவகாரம் அவரது அப்பாவான இளங்கோ குமரவேலுக்கு தெரிந்து விடுகிறது.
இந்த பிரச்சனைக்கு திருமணம் செய்துகொள்ளாமல், கணவன் - மனைவி போல் லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் ஏழு நாட்கள் வாழுங்கள்.
இந்த ஏழு நாட்களில் உங்களுடைய அன்பும் அரவணைப்பும் உண்மையாக இருந்தால் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் ,இல்லையென்றால் இருவரும் பிரிந்து விடுங்கள் என சில நிபந்தனைகளுடன் லிங்காவுக்கும் சாம்பிகாவுக்கும் இளங்கோ குமரவேல் யோசனை சொல்கிறார் .
அதன்படி லிங்காவுடன் சேர்ந்து லிவிங் டூ கெதர் முறையில் வாழ சம்மதிக்கும் சாம்பிகா ஐ டி கம்பெனியின் பொறுப்பில் உள்ள அபார்ட்மெண்ட்டில் லிங்காவுடன் சேர்ந்து ஏழு நாட்கள் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்கிறார்.
முடிவில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஏழு நாட்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அன்புடன் வாழ்ந்தார்களா ?
ஏழு நாட்களில் லிங்காவின் அன்பை புரிந்து கொண்ட சாம்பிகா அவரை திருமணம் செய்து கொண்டாரா / இல்லையா? என்பதை சொல்லும் தொடர்தான் ‘பானி பூரி’
கதையின் நாயகனான லிங்கா காதலனாக அனைத்துவித பரிணாமங்களில் மிக தேர்ந்த நடிகராக பாராட்டும்படியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .
நாயகி சாம்பிகா கதைக்கேற்றபடி நடித்திருக்கிறார் . கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கலாம் .
இன்றைய இளையதலைமுறைக்கேற்ற தெளிவான தந்தையாக இளங்கோ குமரவேல்,,நண்பனாக வரும் வினோத் சாகர் , கனிகா , கோபால் , ஸ்ரீ கிருஷ்ணா தயாள் என நடித்த அனைவரது பங்களிப்பும் சிறப்பு !
இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசையும்,ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவும் தொடருக்கு பக்க பலம்.
இன்றைய இளைஞர்களின் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையை ஒரு புதிய முயற்சியாக பெற்றோர்களின் ஒப்புதலுடன் லிவிங் டூ கெதர் முறையில் காதலர்கள் இருவரும் வாழ்வதாக கதை அமைத்து,,, சில பாகங்களில் திரைக்கதையின் வேகம் குறையும்போது காட்சிகளின் இடையில் தோன்றும் கதையுடன் பயணிக்கும் இயல்பான காமெடியுடன்
எந்த வித ஆபாச கலப்பில்லாமல்,,,, காதலிக்கும் காதலர்களுக்கு வாழ்க்கையில் இருவரின் புரிதல் அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தினை வலியுறுத்தி குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் தொடராக எட்டு பாகங்களாக இத் தொடரை இயக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
ரேட்டிங் ; 3 / 5
Comments