அமானுஷ்ய சக்தி உலவும் இடங்களை தேடி சென்று வீடியோ எடுக்கும் யூடியூபர்களாக நாயகன் வசந்த்ரவியும் அவரின் நண்பர்களான சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் இருக்கின்றனர் .
இவர்களது வீடியோவை பார்த்த ஒரு நிறுவனம் இவர்களுக்கு,,,, பேய் பிசாசுகள் இருக்கும் இடங்களைத் தேடி சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளைக் கவரும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பை கொடுக்கிறது .
இந் நிலையில் லண்டனில் உள்ள தீவில் பாழடைந்த மேன்ஷனில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான விமலா ராமன் அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விட்டதாகவும் மக்களிடையே சொல்லப்படுகிறது.
அவரது சடலம் எப்படி மாயமானது, அந்த சடலம் எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கும் பட்சத்தில்
அந்த பாழடைந்த மேன்ஷனில் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில்,,,,
உலகின் மிகவும் ஆபத்தான பகுதியாக உள்ள லண்டன் தீவில் இருக்கும் ஒரு பாழடைந்த மேன்ஷனுக்கு ஒரு வீடியோ படமாக ஆவணப்படம் எடுக்க வசந்த்ரவி உட்பட நண்பர்கள் அனைவரும் அங்கு செல்கின்றனர் .
அந்த மேன்ஷனை சுற்றி அதன் விவரங்களை சொல்ல வீடியோ எடுக்கும்போது அவர்கள் சந்திக்கும் அமானுஷ்ய சக்திகளின் பின்னணியை திகிலுடன் சொல்லும் படம்தான் ‘அஸ்வின்ஸ்’
நாயகனாக வசந்த் ரவி, பாழடைந்த மேன்ஷனில் நடக்கும் திகிலான காட்சிகளில் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத பயம் கலந்த நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வரும் விமலா ராமன் மிரட்டலான நடிப்பில் ரசிகர்களையே அலற வைக்கிறார் .
முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக்,சரஸ்வதி மேனன் என நண்பர்களாக நடித்துள்ள இவர்கள் அனைவரும் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .
படம் பார்க்கும் ரசிகர்கள் அலறும் வகையில் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை திகில் படங்களுக்கான மிரட்டும் ஒலியாக சச்சின் மற்றும் ஹரியின் ஒலிக்கலவை பணி மிக சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகேவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
புராணத்தில் சொல்லப்படும் கடவுள்களாகிய அஸ்வின் குமாரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு அந்த கதையுடன் திகில் கலந்த திரைக்கதையை இணைத்து காட்சிக்கு காட்சி அலறும்படியான ஒலி அமைப்புடன், படம் பார்க்கும் ரசிகர்கள் மிரளும் ஆங்கில படங்களுக்கு நிகரான திகில் கலந்த பேய் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தருண் தேஜா.
ரேட்டிங் ; 3 . 5 / 5
コメント