top of page

'தலைநகரம் 2' - விமர்சனம் !





‘தலைநகரம்’ படத்தில் பெரிய ரவுடியாக வாழும் சுந்தர்.சி தன் நண்பனின் மரணத்திற்கு பின் திருந்தி வாழ்வதாக காட்சிகளில் படம் முடிவடையும்.

இரண்டாம் பாகத்தில்!!

சென்னையை தங்கள் வசம் வைத்திருக்கும் நிழல் தாதாக்களான தென் சென்னையை 'பாகுபலி' பிரபாகரும்,,, மத்திய சென்னையை விஷால் ராஜனும் ,,,வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸும் அந்தந்த பகுதிகளின் பிரபல தாதாக்களாக ரவுடிசம் செய்து வருகிறார்கள்.

ஒட்டு மொத்த சென்னையின் அதிகாரத்தைக் கைப்பற்ற இவர்களுக்குள் போட்டி இருக்கும் நேரத்தில் ,,,,

மிகப்பெரிய தாதாவான சுந்தர்.சி,, தன் நண்பனின் மரணத்திற்கு பின் திருந்தி வாழ்ந்து தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய சென்னை ரவுடி விஷால் ராஜனின் கஸ்டடியில் உள்ள நடிகை பாலக் லால்வானியை தென் சென்னை ரவுடி பிரபாகரின் ஆட்கள் கடத்துகின்றனர் .

கடத்தப்பட்ட நடிகை பாலக் லால்வானி மயக்க நிலையில் இருக்கும்போது பாலியல் பலாத்காரம் செய்கிறார் தென் சென்னை ரவுடி பிரபாகர்.

இந்த நடிகை கடத்தல் பிரச்சனையை திசை திருப்ப சுந்தர்.சியை சிக்க வைக்க திட்டம் போடுகிறார் தென் சென்னை ரவுடி பிரபாகர்.

இந் நேரத்தில் ரியல் எஸ்டேட் வியாபார பணத்தில் கள்ள நோட்டு கை மாறியதாக போலீசிடம் தம்பி ராமையா சிக்குகிறார்.

இவரை காப்பாற்ற மீண்டும் கத்தியை கையில் எடுக்கிறார் திருந்தி வாழ்ந்த தாதாவான சுந்தர்.சி.

சுந்தர்.சியால் தாதாக்களான மூன்று பேருக்கும் பிரச்சனை வர,,, ஒவ்வொருவரும் தனி தனியாக சுந்தர்.சியை போட்டு தள்ள திட்டம் போடுகிறார்கள்.


முடிவில் மூன்று தாதாக்களின் கொலை திட்டத்திலிருந்து சுந்தர்.சி தப்பித்தாரா ?

சென்னை முழுவதையும் தங்கள் வசம் வைத்திருந்த மூன்று தாதாக்களின் நிலை என்ன என்பதை சொல்லும் படம்தான் 'தலைநகரம் 2'


கதையின் நாயகனான சுந்தர்.சி தாதாவாக அமைதியான நடிப்பிலும்,,அதிரடி நாயகனாக ஆக்க்ஷன் காட்சிகளிலும் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !

நாயகியாக பாலக் லால்வானி நடிப்பில் இளசுகளை ஏங்க வைக்கிறார் .

மிரட்டும் ரவுடிகளாக 'பாகுபலி' பிரபாகர் ,விஷால் ராஜன் ,ஜெய்ஸ் ஜோஸ் மற்றும் தம்பி ராமையா நடித்துள்ளனர் .

படத்திற்கு பக்க பலமாக ஜிப்ரானின் இசையும்,,, கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும்!!!

திருந்தி வாழும் தாதாவை தேவையில்லாமல் வம்புக்கிழுத்து அதனால் உருவாகும் விளைவை தேடி கொள்ளும் மூன்று தாதாக்களின் கதையை மையமாக கொண்டு சில காட்சிகளில் திரைக்கதையில் தொய்வு இருந்தாலும் விறு விறுப்பான மிரட்டலான ஆக்க்ஷன் காட்சிகளுடன் ரசிகர்கள் விரும்பும் பக்கா ஆக்க்ஷன் விருந்தாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் v z துரை


ரேட்டிங் ; 3 / 5



Comments


bottom of page