விக்ரம் பிரபுவுக்கு சிறு வயதில் ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக வெளிச்சம் இருந்தால் மட்டுமே இயல்பான பார்வை தெரியும்.
குறைந்த வெளிச்சத்திலும் இருட்டினிலும் பார்வையில் தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.
விக்ரம் பிரபு நண்பர் விவேக் பிரசன்னாவுடன் இணைந்து சொந்த தொழிலாக கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந் நிலையில் இரவு நேரத்தில் பெண் ஒருவருக்கு இரண்டு நபர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவர்களிடம் இருந்து விக்ரம் பிரபு அந்த பெண்ணை காப்பாற்றி அவர்களை அடித்து பந்தாடுகிறார்.
அடிபட்ட அந்த ரவுடிகள் விக்ரம் பிரபுவை பழிவாங்க துடிக்கின்றனர்.
மற்றொரு பக்கம் அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்று மீனவ மக்களின் காவலனாக திகழும் வேல ராமமூர்த்தி வலது கரமாக உள்ள தனஞ்செயா,, வேல ராமமூர்த்தியின் குடும்பத்தையே அழித்து அவரையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று மீனவ மக்களின் செல்வாக்கு பெற்ற மனிதனாக வளர்கிறார்.
திடீரென ஒருநாள் இரவு நேரத்தில் விக்ரம் பிரபுவின் சித்தப்பாவான ஆனந்தை மர்ம நபர்கள் கொன்று விடுகின்றனர்.
பார்வை குறைப்பாடு காரணமாக அவரை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் விக்ரம் பிரபு தன் சித்தப்பாவை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார்.
முடிவில் விக்ரம் பிரபுவின் சித்தப்பாவான ஆனந்தை கொன்ற மர்ம நபர்களை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா ?
என்ன காரணத்திற்காக சித்தப்பாவை அவர்கள் கொல்கிறார்கள் என்பதை சொல்லும் படம்தான் 'பாயும் ஒளி நீ எனக்கு'
கண் பார்வை குறைபாடு உள்ள கதையின் நாயகனாக நடிக்கும் விக்ரம் பிரபு ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாக அசத்துகிறார்.
கதைக்கேற்றபடி நடிக்கும் நாயகி வாணி போஜன்.
ஆனந்த் ,விவேக் பிரசன்னா ,தனஞ்செயா,வேல ராமமூர்த்தி ,முத்துராமன் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
சாகர் இசையும்,,, ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் ,,தினேஷ் காசி மாஸ்டரின் ஆக்க்ஷனும் படத்திற்கு பக்க பலம்!
கண் பார்வை குறைபாடு உள்ள நாயகன் பாலியல் தொல்லை கொடுக்கும் ரௌடிகளிடமிருந்து இளம்பெண்ணை காப்பாற்ற,,, அதனால் நாயகன் எதிர்நோக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட த்ரில்லரான கதையுடன் விறு விறுப்பான திரைக்கதையில் சில காட்சிகளில் வேக குறை இருந்தாலும் ,, பார்வைக் குறைப்பாட்டை நினைத்து கவலைப்படாமல் வாழும் இளைஞனை பற்றிய வித்தியாசமான ஆக்ஷன் கதையாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.
ரேட்டிங் ; 3 / 5
Comments