top of page

'மாமன்னன்' - விமர்சனம் ! மக்கள் சபையின் மன்னனாக மாறும் மாமன்னன் !


சேலம் மாவட்டத்தில் காசிபுரம் தொகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வடிவேலு ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.


வடிவேலுவின் மகனான உதயநிதி ஸ்டாலின் சிறு வயது முதல் பன்றிகளின் மேல் பாசம் வைத்து பன்றிகளை வளர்த்து வருகிறார்.


மறுபக்கம் இளைஞர்களுக்கு அடிமுறை பயிற்சி ஆசானாகவும் ,, சமுதாயத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்தில் இளைஞர்களுடன் சேர்ந்து போராட்டமும் நடத்துகிறார் .


இந் நிலையில் கல்லூரியில் உதயநிதி ஸ்டாலினுடன் ஒன்றாக படித்த கீர்த்தி சுரேஷ்,,,, உதயநிதி ஸ்டாலின் ஆதரவுடன் அவரது இடத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.


இந்த இலவச பயிற்சி பள்ளியால் ,,,,,,, மாவட்ட செயலாளராக இருக்கும் பகத் பாசிலின் அண்ணனான சுனில் ரெட்டிக்கு அவர் நடத்தும் பயிற்சி பள்ளியால் நஷ்டம் ஏற்பட கீர்த்தி சுரேஷ் நடத்தும் இலவச பயிற்சி பள்ளியை ஆட்களை வைத்து அடித்து நொறுக்குகிறார் .


இதனால் ஆத்திரமடையும் உதயநிதி ஸ்டாலின் சுனில் ரெட்டி நடத்தும் பயிற்சி பள்ளியை அடித்து துவம்சம் செய்கிறார் .


இவர்களது பிரச்சனை பகத் பாசிலுக்கு தெரிய வர ,,,, பிரச்சினையை பேசி முடிவெடுக்க வடிவேலுவையும் உதயநிதி ஸ்டாலினையும் வரவழைக்கிறார் .. அங்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வடிவேலுவை உயர் மட்ட சமூகத்தை சார்ந்த பகத் பாசில் மரியாதைக்குறைவாக நடத்த,,, அவரை உதயநிதி ஸ்டாலின் அடித்து விடுகிறார்.

ஆளுங்கட்சி அரசியலில் இப் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க .ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிக்கு மாறுகிறார் பகத் பாசில்


இந் நேரத்தில் தேர்தலுக்கான நேரம் வர மீண்டும் அதே காசிபுரம் தொகுதியில் வடிவேலுவை எம்.எல்.ஏ-வாக நிறுத்துகிறது மேலிடம் .


அதே நேரத்தில் தன் கட்சி சார்பாக தனக்கு சாதகமான ஆளை வடிவேலுக்கு எதிராக நிறுத்துகிறார் பகத் பாசில்.


தொகுதியில் எந்த இடங்களுக்கும் வடிவேலுவை செல்ல விடாமல் தன் செல்வாக்கினால் பல சிக்கல்களை உருவாக்கும் பகத் பாசில்,, இந்த தேர்தல்ல நீங்க ஜெயிச்சா ஓகே ,, தோத்திட்டிங்க உங்க இரண்டு பேருரோட சாவு என் கையாலதான் என வடிவேலுவையும் உதயநிதி ஸ்டாலினையும் பார்த்து கொலை மிரட்டலான சவால் விடுகிறார் .


முடிவில் நடக்கும் தேர்தலில் வடிவேலு மீண்டும் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றாரா ?

கொலை மிரட்டல் விடுத்த பகத் பாசில் வடிவேலுவையும் உதயநிதி ஸ்டாலினையும் கொன்றாரா ? என்பதை சொல்லும் படம்தான் 'மாமன்னன்'



கதையின் நாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் ஆக்ரோஷமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தன் தந்தையான வடிவேலு அவமானப்படும் காட்சிகளிலும் ,,,, ஆக்க்ஷன் காட்சிகளில் பகத் பாசிலின் அடியாட்களை பந்தாடும்போது அதிரடி நாயகனாக அசத்துகிறார்.



நாயகியாக வரும் கீர்த்தி சுரேஷ் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்திருக்கிறார் .


இதுவரை திரையில் பார்க்காத வடிவேலு ,,, குணசித்திர நடிகராக மாமன்னன் கதாபாத்திரமாகவே உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் வாழ்கிறார் .

மிரட்டலான வில்லனாக நாயகனுக்கு இணையாக பகத் பாசிலின் நடிப்பில் தியேட்டரே விசிலில் அதிர்கிறது !



ஏ. ஆர்.ரகுமானின் இசையும்,,, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


ஒடுக்கப்பட்ட மக்களை உயர் சமூகம் நடத்தும் ஆதிக்க அவலத்தை கதையின் மையமாக வைத்து ,,,அரசியலை களமாக கொண்ட திரைக்கதையுடன் நடிக்கும் நடிக - நடிகையர் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கும் படியான காட்சிகள் அமைத்து,, பிறப்பால் அனைவரும் சமம் என்கிற விழிப்புணர்வை சமுதாய மக்களுக்கு சொல்வதுடன்,, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இயல்பான அடையாளத்தை அழகாக வெளிப்படுத்தி அனைவரும் பாராட்டும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் .


ரேட்டிங் : 3. 5 / 5


மக்கள் சபையின் மன்னனாக மாறும் மாமன்னன் !



©2020 by MediaTalks. 

bottom of page