top of page
mediatalks001

'பம்பர்' - விமர்சனம் ! இறைவன் மிக பெரியவன் !!


தூத்துக்குடி மாவட்டத்தில் நாயகன் வெற்றி நண்பர்களுடன் சேர்ந்து பணத்திற்காக வழிப்பறி , திருட்டு , கூலிக்கு கொலை செய்வது போன்ற வேலைகளை போலீஸ் கான்ஸ்டபிள் கவிதா பாரதி உதவியுடன் செய்து வருகிறார்.

புதிதாக பொறுப்பேற்கும் உயர் அதிகாரி அருவி மதனுக்கு பயந்து அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வெற்றி நண்பர்களுடன் சேர்ந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு கொள்கிறார் .


நான்கு பேரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்வழியில் வயதான முஸ்லீம் நபரான ஹரீஷ் பெராடி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய்க்கான பம்பர் லாட்டரி சீட்டினை வாங்குகிறார்.


அந்த லாட்டரியை அங்கேயே தவற விட்டுச் சென்று விடுகிறார் வெற்றி. அதை எடுத்து வைத்துக் கொள்ளும் ஹரீஷ் பெராடி, சில நாட்களில் அந்த லாட்டரிக்கு பத்து கோடி ரூபாய் பம்பர் விழுந்திருப்பதை அறிகிறார்.

இறைவன் மேல் அதிக பற்று வைத்துள்ள ஹரீஷ் பெராடி இறை சக்திக்கு பயந்து அந்த லாட்டரியில் விழுந்த பத்து கோடி ரூபாய் பம்பர் தகவலை வெற்றியிடம் சொல்லி லாட்டரி டிக்கட்டை வெற்றியிடம் கொடுப்பதற்காக தூத்துக்குடி செல்கிறார் .


இதற்கிடையில் வெற்றிக்கு பும்பராக கிடைத்த பத்து கோடியை அனுபவிக்க ஹரீஷ் பெராடியின் உறவுகளும் ,, ஒரு கட்டத்தில் வெற்றியின் நண்பர்களும் முயற்சி செய்கின்றனர் .


முடிவில் தூத்துக்குடிக்கு வரும் ஹரீஷ் பெராடி வெற்றியை தேடி லாட்டரியில் விழுந்த பத்து கோடி ரூபாய் பம்பர் தகவலை தெரியப்படுத்தி அந்த லாட்டரி டிக்கட்டை அவரிடம் ஒப்படைத்தாரா ?

ஹரீஷ் பெராடியின் உறவுகளுக்கும் ,,,,வெற்றியின் நண்பர்களுக்கும் அபகரிக்க முயன்ற பணம் அவர்களுக்கு கிடைத்ததா ? என்பதை சொல்லும் படம்தான் 'பம்பர்'


நாயகனாக நடிக்கும் வெற்றி கதையுடன் இணைந்து கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகி ஷிவானி நாராயணன் கதைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையின் மற்றொரு நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வயதான லாட்டரி சீட்டு விற்பனையாளராக வரும் ஹரிஷ் பெராடி நடிப்பின் ஆளுமையில் அசத்துகிறார் .

தமிழ்ப் படங்களில் அதிக வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி வித்தியாசமான கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகராக உணர்வுபூர்வமான பாராட்டும்படியான நடிப்பில் ரசிகர்களின் மனதை கனக்க வைக்கிறார் .


போலீஸாக நடிக்கும் கவிதா பாரதி, ஜி.பி.முத்து, அருவி மதன், ஆதிரா, தங்கதுரை, கல்கி, திலீப், செளந்தர்யா என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .


கோவிந்த் வசந்தாவின் இசையும், வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !!


மனிதநேய ஒழுக்கத்துடன் இறைவனுக்கு பயந்து பணத்தால் குணம் மாறாமல் வாழும் எளிய மனிதனின் கதையை மையமாக வைத்து தெளிவான அழுத்தமான திரைக்கதை அமைப்புடன் ,,, இடைவேளைக்கு பின் ரசிகர்களே கதையுடன் இணைந்து பயணிக்கும்படியான காட்சிகள் அமைத்து,, யாருமே யூகிக்க முடியாத எதிர்பாராத முடிவுடன் படம் பார்க்கும் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி பாராட்டுமளவில் மிக திறமையாக இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வகுமார் .


ரேட்டிங் ; 4 / 5 --- இறைவன் மிக பெரியவன் !!


Comentarios


bottom of page