top of page

' மாவீரன் ' - விமர்சனம் !



தின பத்திரிகையில் மாவீரன் கதை எழுதி ஓவியமாக வரைந்து கொடுக்கும் வேலையை செய்யும் பயந்த சுபாவம் கொண்ட சிவகார்த்திகேயன் தன் அம்மா சரிதா மற்றும் தங்கையுடன் கூவம் ஆற்றின் ஓரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஒருநாள் இவர்கள் வசிக்கும் குடியிருப்பை காலி செய்ய சொல்லி அரசாங்கத்திடம் இருந்து நோட்டீஸ் வருகிறது.


குடியிருப்பை காலி செய்த மக்கள் குடிசை மாற்று வாரியம் மூலமாக அரசாங்கம் கொடுத்துள்ள மக்கள் மாளிகை எனும் அடுக்குமாடி குடியிருப்பில் சிவகார்த்திகேயனின் குடும்பமும், அவர் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களும் குடியேறுகிறார்கள்..


தரமில்லாத அந்த அடுக்குமாடி குடியிருப்பு அங்கு குடிபுகும் மக்களுக்கு நாளடைவில் நரகமாக மாறுகிறது.


வீடு தரமில்லாததை உணர்ந்த சிவகார்த்திகேயன் இதன் மூலம் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.


மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தனது கதையின் காட்சிகளாக சித்தரித்து ஓவியமாக தன் பத்திரிகையில் வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன் .


இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளர் அருவி மதனால் சிவகார்த்திகேயன் குடும்பத்திற்கு பிரச்சனை ஏற்பட ,,,,பயத்தினால் இந்த பிரச்சனையில் தலையிடாமல் சிவகார்த்திகேயன் ஒதுங்குகிறார் .



இந் நேரத்தில் சரிதாவின் பேச்சினால் அவமானப்படும் சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயலும்போது கால் தவறி கீழே விழ கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அப்போது அங்கு கேட்கும் மாய குரலால் தைரியம் கொண்ட மாவீரனாக கண் விழிக்கிறார் ..

அந்த குரலால் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையே மாறுகிறது !


முடிவில் மாய குரலின் சக்தி மூலம் தான் எழுதும் கதையில் வரும் மாவீரனாக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ? என்பதை விறு விறுப்பான கதை களத்துடன் புதுமையாக சொல்லும் படம்தான் 'மாவீரன்'


நாயகனாக சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் குடிசை பகுதி வசிக்கும் இளைஞராக உடல் மொழியில் கதையுடன் இணைந்து கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.


தின பத்திரிகை துணை ஆசிரியராக நடித்திருக்கும் அதிதி ஷங்கர் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நீண்ட வருடங்களுக்கு பின் அனுபவ நடிப்பால் அசத்தும் சிவகார்த்திகேயன் அம்மாவாக வரும் சரிதா, காமெடி கலந்த வில்லனாக நடிப்பில் மிரட்டும் அமைச்சராக வரும் மிஷ்கின் ,அமைதியான முக பாவத்தில் சிரிப்பில் தியேட்டரையே அதிர வைக்கும் யோகி பாபு ! தெலுங்கு நடிகர் சுனில்,சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருக்கும் மோனிஷா பிளஸி என அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் !



விஜய் சேதுபதியின் பின்னணி குரல் ஒரு கதாபாத்திரமாக மாறி படத்தை ரசிக்க வைக்கிறது !


பரத் சங்கரின் இசையில் பாடல்களும் ,,,பின்னணி இசையும்,,,ஒளிப்பதிவாளர் விது அய்யனாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !!


சமூக பிரச்சனையான சென்னை குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் அவலங்களை மையமாக கொண்ட கதையுடன் ,,,அரசியல் கலந்த திரைக்கதை அமைப்புடன் ,,,வித்தியாசமாக பின்னணி குரல் கதையுடன் இணைந்து பயணிக்கும் படியான காட்சிகள் அமைத்து,,காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் மடோன் அஷ்வின்.


ரேட்டிங் ; 4 / 5


வெற்றி வீரனான 'மாவீரன்'

bottom of page