பள்ளியின் தாளாளர் சுரேஷ் சக்ரவர்த்தி சேலத்தில் ஒரே வளாகத்தில் ஆண்கள் படிக்கும் பள்ளியும் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் படிக்கும் பள்ளிகளை நடத்தி வருகிறார். ஒரு நாள் திடீரென இறந்து போகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி.
இவரது மறைவுக்குப் பிறகு மகன்களான சுப்பு பஞ்சுவும் அவரது தம்பியும் இரு பள்ளிகளை ஒன்றாக இணைத்து விடுகிறார்கள்.
இரு பள்ளிகளின் மாணவர்களும் ஒரே வகுப்பில் இணையும்போது 11-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரே வகுப்பறையில் படிப்பதால் கடைசி பெஞ்சில் உட்கார இரண்டு குழுவினருக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கு மாணவர் தேர்தல் வருகிறது .
இந்த தேர்தலை போட்டியாக மாற்றி அதில் ஒரு குழுவினர் வெற்றி பெற்று கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொள்கிறார்கள்.
இந் நேரத்தில் பள்ளியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பிரச்சனை ஏற்பட்டு இரு குழுவும் அடிதடியில் இறங்க ,, மேலிடம் மாணவர்களை கண்டித்து வெளியில் அனுப்ப முடிவு செய்யும் நேரத்தில் இரு குழுவினரும் நட்பாகி ஒன்றாக இணைகின்றனர் .
ஒரு கட்டத்தில் நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்ய போவதாக எழுதிய பேப்பர் ஒன்று அம்மு அபிராமி கையில் கிடைக்க,,,,, அதில் உள்ள கையெழுத்தை வைத்து அதை எழுதிய மாணவர் யார் என மாணவர்களுடன் சேர்ந்து அந்த மாணவனை கண்டுபிடிக்க போராடுகிறார் அம்மு அபிராமி !!
முடிவில் தற்கொலை செய்ய போவதாக எழுதிய மாணவனை உடன் இருக்கும் மாணவர்களுடன் அம்மு அபிராமி கண்டுபிடித்தாரா ?
அவன் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணகர்த்தா யார் ? என்பதை சொல்லும் படம்தான் ’பாபா பிளாக் ஷீப்’
பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஹர்ஷத் கான், அதிர்ச்சி அருண், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், சேட்டை ஷெரிப், ராம் நிஷாந்த், குட்டி வினோ என அனைவருமே துடி துடிப்புள்ள இளைஞர்களாக படம் முழுவதும் இயல்பான நடிப்பில் சிறப்பாக செய்துள்ளனர் !
பள்ளி தாளாளராக வரும் சுப்பு பஞ்சு ,பள்ளி ஆசிரியர்களாக நடித்திருக்கும் மதுரை முத்து, போஸ் வெங்கட், வினோதினி, விருமாண்டி அபிராமி என நடித்தவர்கள் நடிப்பின் பங்களிப்பு சிறப்பு !!
சிறப்பான ஒளிப்பதிவில் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் ,கதைக்கேற்றபடி பின்னணி இசை !
2000-ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து கதைக்களம் அமைந்தாலும் முதல் பாதியில் இருந்த கதையின் வேகம் இடைவேளைக்கு பின் திசை மாறும் திரைக்கதையால் அழுத்தமில்லாத காட்சிகளின் தொய்வினால் கதையின் சுவாரஸ்யம் குறைகிறது .
பேச்சில் திறமையான இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம் காமெடி கலந்த 2k கிட்ஸ் படமாக இயக்கியுள்ளார் . அவரது முயற்சியை பாராட்டலாம் !
ரேட்டிங் ; 3 / 5
Comments