
நடிகர்கள் : விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த் சங்கர்
இசை : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன்
இயக்கம் : பாலாஜி குமார்
தயாரிப்பு : இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ்
புகழ் பெற்ற முன்னணி மாடலிங் அழகியான மீனாட்சி செளத்ரி மர்மமான முறையில் பூட்டியிருந்த தன் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
இக் கொலை வழக்கை விசாரிக்க மேலதிகாரி ஆனந்த்,,, பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கிறார் .
தேவைப்பட்டால் உதவிக்கு துப்பறிவதில் பெயர் பெற்ற விஜய் ஆண்டனியின் முன்னிலையில் விசாரணையை மேற்கொள்ள சொல்கிறார் மேலதிகாரிஆனந்த்
இந் நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் ஆரம்பத்தில் இக் ‘கொலை’ வழக்கை விசாரிக்க மறுக்கும் விஜய் ஆண்டனி,,,, பின் ரித்திகா சிங்கின் வற்புறுத்தலுக்கு இணங்க வழக்கை விசாரிக்க உடன்படுகிறார்.
இருவரும் இணைந்து விசாரணையை மேற்கொள்ளும்போது கொலை செய்யப்பட்ட மீனாட்சி செளத்ரியுடன் தொடர்பில் இருந்த நபர்களை பற்றிய தகவல்களுடன்,,
முடிவில் கொலை செய்த கொலையாளியை சாமர்த்தியமாக விஜய் ஆண்டனி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சொல்லும் படம் தான் 'கொலை'
சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் விநாயக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி குற்றவாளியை கண்டுபிடிக்கும் இடங்களில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பிலும்,,, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மகளிடம் பேசும் காட்சிகளில் உணர்வுபூர்வமான அனுபவ நடிகராக நடிப்பில் முத்திரை பதிக்கிறார் !
கதைக்கேற்றபடி ஐபிஎஸ் அதிகாரியாக இயல்பாக நடித்துள்ள ரித்திகா சிங்
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மாடலிங் அழகியாக வரும் மீனாட்சி செளத்ரி,, சிறப்பான நடிப்பில் மாடலிங் அழகியாக ரசிகர்கள் மனதில் பதிகிறார் !
அமைதியான முகத்தில் இருந்தாலும் சைக்கோ வில்லனாக நடிப்பில் மிரட்டுகிறார் மீனாட்சி செளத்ரியின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர்,
ராதிகா சரத்குமார் ,அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய், முரளி சர்மா என நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் ,
படத்திற்கு பக்க பலமாக ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும்,
கிரிஷ் கோபாலகிருஷ்ணனில் இசையில் பாடல்களுடன் , பின்னணி இசையும் குறிப்பாக மயிலிறகால் வருடும் மென்மையான 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடல் !!
க்ரைம் கலந்த த்ரில்லர் கதையாக ஹாலிவுட் பட தரத்தில் விறு விறுப்பான நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் புதுமையான கதையமைப்பில் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வினை ஏற்படுத்துகிறார் இயக்குநர் பாலாஜி குமார்.
க்ரைம் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு ஹாலிவுட் பட பாணியில்
பாராட்டும்படியான தொழிற்நுட்பத்தில் எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் ''கொலை' '
ரேட்டிங் ; 4 / 5
Comentários