top of page

‘எல்.ஜி.எம்’ - விமர்சனம் !

mediatalks001

Casting : Harish Kalyan, Ivana, Nathiya, Yogi Babu, VJ Vijay,Vtv ganesh


Directed By : Ramesh Thamizhmani


Music By : Ramesh Thamizhmani


Produced By : Dhoni Entertainment


நதியாவின் மகனான ஹரிஷ் கல்யாண் தன்னுடன் பணி புரியும் நாயகி இவானாவை இரண்டு வருடங்களாக காதலிக்கிறார் .


காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.


இவர்களின் திருமணத்திற்கு இருவரது குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவிக்கிறார்கள்

இரு வீட்டாரும் சேர்ந்து திருமணத்தை பற்றி பேசி தேதி நிச்சயிக்கும் நேரத்தில்,,, இவானா ஹரிஷ் கல்யாணை தனியே அழைத்து சென்று திருமணத்திற்கு பிறகு யார் என்றே தெரியாத உங்க அம்மாவுடன் இணைந்து வாழ்வது எனக்கு சரியாக வராது என சொல்ல ,,,, அப்பா இல்லாத ஹரிஷ் கல்யாண் தன் அம்மா நதியாவை தனியாக விட்டு நாம் வாழ்வது நினைத்து பார்க்க கூட முடியாது, என்று சொல்கிறார்.


இதனால் நடைபெற இருக்கும் இவர்களுடைய திருமணத்தில் பிரச்சனை ஏற்பட, இந்த பிரச்சனைக்கு தீர்வாக இவானா ஹரிஷ் கல்யாணிடம் ஒரு யோசனை சொல்கிறார்.


திருமணத்திற்கு முன்பு இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு சுற்றுலா ட்ரிப் போகலாம், அப்போது வருங்கால மாமியாருடன் பழகிப்பார்த்து அவர் எனக்கு ஒகே ஆனால், திருமணம் செய்துகொள்ளலாம் அவரது குணம் எனக்கு பிடிக்கவில்லையென்றால் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என யோசனை சொல்கிறார் .


இவானா யோசனைப்படி இரு குடும்பத்தாரும் ஒன்றாக ட்ரிப் போக இவானாவுக்கு ஹரிஷ் கல்யாணின் அம்மா நதியாவின் குணம் பிடித்து முடிவில் ஹரிஷ் கல்யாணை திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம் தான் ‘எல்.ஜி.எம்’.


நாயகன் ஹரிஷ் கல்யாண் ரசிகர்களை கவரும்படி இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார் .

கதைக்கேற்றபடி அமைதியான அழகில் எதார்த்தமாக நடிக்கும் இவானா .


ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக வரும் நதியா ஆரம்பத்தில் மகனின் அம்மாவாகவும் இடைவேளைக்கு பின் நடை உடை பாவனையில் வயதானாலும் இளம் வயது நதியாவாக நடிப்பில் ஜொலிக்கிறார்


யோகி பாபுவும் விஜே விஜய்யும் நடத்தும் காமெடி அலப்பறையில் அரங்கம் அதிரும்படி தியேட்டரில் விசில் பறக்கிறது .

வழக்கமான நடிப்பில் வி டி வி கணேஷ் .

இயக்குநர் ரமேஷ் தமிழ் மணியின் இசையும் ,,,ஒளிப்பதிவாளர் விஸ்வஜித்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


மாமியார் தொந்தரவு இல்லாமல் கணவனுடன் தனிப்பட்ட வாழ்க்கை சந்தோசமாக வாழ்வது என ,,, திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் இன்றைய இளம் பெண்களின் பிரச்சனையான இந்த கதையுடன் புது விதமாக மாமியாரின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டு காதலனுடன் வாழ நினைக்கும் பெண்ணின் கதையை காமெடி கலந்த திரைக்கதை அமைப்புடன் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ரமேஷ் தமிழ் மணி.


ரேட்டிங் ; 3 . 5 / 5



Yorumlar


©2020 by MediaTalks. 

bottom of page