நாயகன் மண்ணுவின் அப்பாவிடம் முன்பு அடியாளாக இருந்தவர்கள் கிளியப்பன், சாலையார்.
இதில் சாலையார் மண்ணுவின் அப்பாவை கொலை செய்ய ,,, பின்பு கிளியப்பனும் ,சாலையாரும் இரண்டு குழுவாக மாறி வட சென்னையில் மிக பெரிய தாதாவாக மாறுகின்றனர்,
இந் நிலையில் நாயகன் மண்ணு ரவுடியிசம் பார்க்காமல் அண்ணன் பழனி, அம்மாவுடன் வாழ்கிறார்.
பழனியின் நெருக்கமான நண்பன் துரை சாலையாரின் கையாள். கல்யாணம் ஆகி பத்தே நாளில் ஒரு கொலை வழக்கில் ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய சூழல் வர, நண்பனுக்காகப் பழனி அந்தப் பழியை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குச் செல்கிறான்.
இதற்கிடையில் கிளியப்பனின் மைத்துனனை சாலையாரின் ஆட்கள் வெட்டி சாய்க்கின்றனர் .
ஒரு கட்டத்தில் கிளியப்பன் சாலையாருக்கு ஒரு சம்பவத்தை செய்ய சொல்ல ,, அதற்கான பணத்தை வாங்க சாலையாரின் ஆட்கள் கிளியப்பன் வீட்டுக்கு செல்ல அங்கு துரையை பார்க்கும் கிளியப்பனின் அடியாள் மைத்துனனை கொன்றவன் இவன்தான் என கிளியப்பனிடம் துரையை கை காட்ட,, துரையை கண்ட துண்டமாக வெட்ட தன் ஆட்களுக்கு ஆணையிடுகிறான் கிளியப்பன்.
முடிவில் கிளியப்பனின் ஆட்கள் துரையை வெட்டி கொலை செய்தார்களா ? கிளியப்பன் வீட்டுக்கு துரையை சாலையார் அனுப்பியதன் உள்நோக்கம் என்ன ? என்பதை சொல்லும் படம் தான் ‘டைனோசர்ஸ்’.
மண் என்ற ஆற்றல் மண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உதய் கார்த்திக் எந்த பிரச்சனையும் செய்யாமல் ஜாலியாக வாழும் வட சென்னை இளைஞராக படம் முழுவதும் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார் .
நாயகியாக நடிக்கும் சாய் பிரியா தேவா கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
இயக்குனர் ரமணா ,அம்மாவாக நடிக்கும் ஜானகி சுரேஷ் ,துரையாக நடித்திருக்கும் மாறா உதய் கார்த்திக்கின் அண்ணனாக நடிக்கும் ரிஷி,சாலையார் என தாதாவாக நடிக்கும் மானக்ஷா ,அவரது எதிரணி தாதாவான கிளியப்பன் வேடத்தில் நடிக்கும் கவின் ஜெய் பாபு ,துலுக்கானம் என்ற வேடத்தில் நடிக்கும் அருண் என அனைவரும் நடிப்பில் மிரட்டுகின்றனர் .
போபோ சசியின் இசையும் .ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி.ஆனந்த் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
வட சென்னையில் வாழும் இரு தாதாக்களின் ரவுடியிசத்தை மையமாக கொண்ட கதையுடன் ஆக்க்ஷன் காட்சிகள் அனைத்துமே இயல்பாக நடப்பது போல அமையும் காட்சிகளுடன் , கிளைமாஸ்க்கில் வரும் வசனங்கள் ரசிகர்கள் ரசிக்கும்படி மாஸான கேங்க்ஸ்டர் படமாக இயக்கியுள்ளார் எம்.ஆர்.மாதவன்.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments