பாண்டிச்சேரியில் 1965-ம் ஆண்டு ஊருக்குவெளியே இருக்கும் பங்களாவில் பிரதீப் ராம் சிங் ராவத் தலைமையில் ஒரு குடும்பம் மனிதர்களை வைத்து ஒரு மரண விளையாட்டை நடத்தி வருகிறது. அதில் வென்றால் கட்டிய பணத்திற்கு இணையாக பல மடங்கு பரிசு, தோற்றால் மரணம். இப்படி ஒரு பயங்கரமான விளையாட்டை நடத்தும் பிரதீப் ராம் சிங் ராவத் குடும்பத்தை காவல் துறையுடன் சேர்ந்து ஊர் மக்கள் அடித்து கொன்று விடுகிறார்கள்.
இச் சம்பவத்துக்கு பிறகு இப் போதைய காலகட்டத்தில் விழாக்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சந்தானத்திற்கும் சுரபிக்கும் காதல் ஏற்படுகிறது.
பாண்டிச்சேரியில் பெரும் புள்ளியாக இருக்கும் பெப்சி விஜயனிடம் இருக்கும் பணத்தை பிபின் மற்றும் முனீஷ்காந்த் டீம் கொள்ளையடிக்க, பிபின் டீமிடம் இருந்து மொட்டை ராஜேந்திரன் டீம் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறது. ஆனால், அந்த பணம் எதேட்சையாக சந்தானத்தின் கையில் கிடைக்கிறது. பணத்தோடு பயணிக்கும் சந்தானத்தின் நண்பர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க, விபரீதமான விளையாட்டால் கொலை செய்யப்பட்ட குடும்பம் வசித்த அந்த பங்களாவில் நண்பர்கள் பணத்தை மறைத்து வைக்கிறார்கள். பணம் இருப்பதை தெரிந்து கொண்ட கூல் சுரேஷ் பணத்தை திகில் பங்களாவில் மறைத்து வைக்கிறார் .
இந் நேரத்தில் சந்தானத்திடம்தான் தன்னுடைய பணம் இருக்கிறது, என்பதை தெரிந்துக்கொள்ளும் பெப்ஸி விஜயன், நாயகி சுரபியை வைத்து சந்தானத்தை மிரட்டுகிறார், சுரபியை திருமணம் செய்ய காதல் பிரச்சனைக்காக பெப்ஸி விஜயனுக்கு கொடுக்க சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. அவர் பணத்தை திருப்பி கொடுப்பதற்காக, அந்த பங்களாவில் இருக்கும் பணத்தை எடுக்க செல்ல, அங்கிருக்கும் பேய்களிடம் அந்த மரண விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். சந்தானம் மற்றும் அவரது நண்பர்களுடன், பணத்தை தேடி வரும் பெப்ஸி விஜயன், பிபின், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் அந்த பேய் பங்களாவில் சிக்கிக்கொண்டு விளையாட்டில் பங்கேற்கின்றனர் முடிவில் அவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்று உயிருடன் திரும்பினார்களா ? சாமர்த்தியமாக மரண விளையாட்டில் வெற்றி பெற்றது யார் ? என்பதை காமெடியாக சொல்லும் படம்தான் ‘டிடி ரிட்டன்ஸ்’
நாயகனாக நடிக்கும் சந்தானம் கதாநாயகனாக காதல் காட்சிகள், ஆக்ஷனுடன் சேர்ந்து தன் குழுவினருடன் சேர்ந்து படம் முழுவதும் தியேட்டரே அதிரும்படி காமெடி தர்பாரே நடத்துகிறார் .
நாயகியாக நடிக்கும் சுரபி கதைக்கேற்றபடி நடிக்கிறார் !
வில்லனாக காமெடி செய்யும் பெப்ஸி விஜயன், பேயாக மிரட்டும் பிரதீப் ராம் சிங் ராவத், மாறன், சேது, தங்க துரை முனீஷ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன், பிபின், தீனா, கிங்ஸ்லி என நடிப்பில் அனைவரும் பட்டையை கிளப்புகின்றன
ரோஹித் ஆப்ரஹாமின் இசையும் ,தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் !
ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக திகிலான பேய் பட கதையாக ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பயமின்றி குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் ஜாலியான பேய் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.
ரேட்டிங் ; 3. 5 / 5
Comments