‘சான்றிதழ்’ - விமர்சனம்!
- mediatalks001
- Aug 4, 2023
- 1 min read

Casting : Harikumar, Roshan Bhashir, Ratha ravi, Abu Khan, Ravimariya, Manobala, Aruldass, Kowsalya, Ashika Ashokan, Tanisha Kuppanda, Adithya Kathir, Kajal Pasupathi, Uma Shree
Directed By : Jayachandran
Produced By : Vettrivel Cinemas
Cinematography: S.S.RavimaaranShivan.D.F.T
Music director: Baiju jacob
Producer by: SJS. Sundharam & JVR
Production: Vettrivel Cinemas
PRO: Nikil murukan
திண்டுக்கல்மாவட்டத்தில் கருவறை எனும் கிராமத்தில் இருக்கும் மக்கள் மிகவும் கட்டுப்பாடுடன் தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
வெளியூர் ஆட்கள் அம் மக்களின் அனுமதி இல்லாமல் அந்த ஊருக்கு உள்ளே நுழைய முடியாது. உள்ளூர் ஆட்கள் அனுமதி இல்லாமல் ஊரை விட்டு வெளியே செல்லவும் முடியாது.
இப்படி ஒழுக்கமாகவும் கட்டுப்பாடுடன் வாழும் இந்த ஊருக்கு சிறந்த கிராமம் என்கிற விருதை வழங்க கவர்னர் முடிவு செய்கிறார். அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள்.
இதனால் கோபமடையும் அமைச்சர் ராதாரவி கருவறை கிராமத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
முடிவில் கவர்னர் வழங்கும் விருதை கருவறை கிராம மக்கள் வாங்க மறுப்பதற்கான காரணம் என்ன?
கிராம மக்கள் ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் கட்டுப்பாடுடனும் வாழ்ந்து வருவதற்கான அர்த்தம் என்ன? என்பதை சொல்லும் படம்தான் 'சான்றிதழ்'
வெள்ளைச் சாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிகுமார் கிராம மக்களுக்காக வாழும் தியாக செம்மலாக
இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
நாயகனாக வரும் ரோஷன் பஷீர், அமைச்சர் வேடத்தில் நடிக்கும் ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ,ரவி மரியா. மனோபாலா ஆதித்யா கதிர் ,தனிஷா குப்பண்டா, ஆதித்யா கதிர், காஜல் பசுபதி, உமா ஸ்ரீ என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் !
ரவிமாறன் சிவன் ஒளிப்பதிவும் ,பைஜு ஜேக்கப்பின் இசையும் படத்திற்கு பலம் !
மோசமாக வாழ்ந்து வரும் கிராம மக்களை கருவறைக்கு இணையாக ஒழுக்கமாகவும் கட்டுப்பாடுடனும் வாழ்ந்து வரும் கிராம மக்களாக மாறும் கதையை கொண்டு படம் பார்க்கும் ரசிகர்களே நாம் வாழ்ந்து வரும் ஊரும் இதே போல மாறினால் எப்படி இருக்கும் என ஏங்கும் உணர்வுடன் இப் படத்தை தரமான படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஜெயச்சந்திரன்.
ரேட்டிங் ; 2.5 / 5
Comments