’லாக்டவுண் டைரி’ பட விமர்சனம்!!
- mediatalks001
- Aug 5, 2023
- 2 min read

கார் மெக்கானிக் எம் எஸ் பாஸ்கரின் மகனான நாயகன் விஹான் ஜாலியும் பணக்கார பெண்ணான நாயகி ஷகானாவும் காதலிக்கிறார்கள்.
இருவரது காதலுக்கு ஷகானாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அவர்களின் எதிர்ப்பை மீறி ஷகானாவை திருமணம் செய்துகொள்ளும் விஹான் ஜாலி பின்னாளில் குழந்தையுடன் பெங்களூரில் கால் டாக்ஸி டிரைவராக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் வயதான தொழிலதிபர் முகேஷ் ரிஷியின் இளம் மனைவி நேஹா சக்ஸேனா விஹான் ஜாலியின் காரில் பயணம் செய்யும் போது ஒரு கும்பல் கொலை செய்ய முயல ,,, அந்த கும்பலிடமிருந்து நேஹா சக்ஸே னாவை காப்பாற்றுகிறார் விஹான் ஜாலி..
இந்நேரத்தில் திடீரென்று உடல் நிலை பாதிக்கப்படும் விஹான் ஜாலியின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதோடு, அதற்கு பல லட்சங்கள் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால், விஹான் ஜாலி வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதோடு, பலரிடம் கடன் வாங்கிவிட்டு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
விஹான் ஜாலியின் கடன் பிரச்சனையை தெரிந்து கொண்ட நேஹா சக்ஸே னா அவருக்கு பண உதவி செய்கிறார். பணத்திற்கு பதிலாக விஹான் ஜாலியின் மீது ஆசைப்படும் நேஹா சக்ஸேனா அவர் மூலம் ஒரு குழந்தைக்கு தாயாக ஆசைப்படுகிறார் .விஹான் ஜாலி அதற்கு மறுப்பு தெரிவிக்க. ஒரு கட்டத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பணத்திற்காக விஹான் பல இடங்களில் முயற்சித்தும் பணம் கிடைக்காமல் போக, அவர் மீண்டும் நேஹா சக்ஸேனாவிடம் உதவி கேட்கிறார்.
அவரோ நான் பணம் கொடுக்கிறேன் என் ஆசையை நிறைவேற்று என விஹான் ஜாலியிடம் போராடுகிறார் .
முடிவில் விஹான் ஜாலி நேஹா சக்ஸேனாவின் ஆசையை நிறைவேற்றினாரா ?
உயிருக்கு போராடும் விஹான் ஜாலியின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்து அந்த குழந்தை உயிர் பிழைத்ததா ? என்பதை சொல்லும் படம்தான் ’லாக்டவுண் டைரி’
நாயகனாக நடிக்கும் விஹான் ஜாலி கதையுடன் இணைந்து காதல் காட்சிகளிலும் , உணர்வுபூர்வமான காட்சிகளிலும் ,, அதிரடி ஆக்சனிலும் தேர்ந்த நடிகராக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !
அமைதியான அழகில் நாயகியாக நடிக்கும் ஷகானா கதைக்கேற்றபடி இயல்பாக நடித்துள்ளார் !
கன்னட சினிமாவின் முன்னணி நடிகையான நேஹா சக்ஸேனா கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் படம் பார்க்கும் ரசிகர்களே அனுதாபப்படுமளவில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நேஹா சக்ஸேனாவின் கணவராக நடிக்கும் முகேஷ் ரிஷி, நாயகனின் அப்பாவாக நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், நாயகியின் பெற்றோர்களாக நடிக்கும் ஜாலி பாஸ்டியன் - பிரவீனா, முன்னா சைமன், முத்துகாளை, விஷ்ணுகுமார், கல்லூரி வினோத், திரிஷ்யா என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் பி.கே.எச்.தாஸ் ஒளிப்பதிவும் ,ஜாசி கிஃப்ட் & AB முரளியின் இசையும் படத்திற்கு பலம் !
ஒரு பணக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நாயகனின் வாழ்க்கையில் அதிக வயது வித்தியாசமுள்ள ஒருவனை திருமணம் செய்துகொள்ளும் இளம் பெண்,,,,, நாயகன் மீது ஆசைப்பட்டு ஒரு குழந்தைக்கு தாயாக நினைக்கும் கதையை மையமாக வைத்து ,, விறு விறுப்பான இயல்பான திரைக்கதை அமைப்புடன் நாயகனின் கதாபாத்திர தன்மையை இறுதிவரை மாற்றாமல் அனைவரும் ரசிக்க கூடிய குடும்ப படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜாலி பாஸ்டியன் .
ரேட்டிங் ; 2,5 / 5
.
Comentários