வினோத் குமார் சென்னியப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வான் மூன்று’
இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் ஆகியோரின் நடிப்பில் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நேரடியாக வெளியாகிறது
உயிருக்கு போராடும் நிலையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்ய முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ஆதித்யா பாஸ்கர்,
அடுத்த சில நிமிடங்களில் அதே மருத்துவமனையில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயலும் அம்மு அபிராமியும் அனுமதிக்கப்படுகிறார்.
தீவிர சிகிச்சையில் பிழைத்து கொள்ளும் இருவரும் ஒரே வார்டில் எதிர் எதிரே மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில் அம்மு அபிராமியை பார்த்தவுடன் ஆதித்யா பாஸ்கர் மனம் மாறி தன் காதலை அவரிடம் வெளிப்படுத்துவதும் , ஆரம்பத்தில் அதனை ஏற்று கொள்ள மறுக்கும் அம்மு அபிராமி சில நாட்களுக்கு பின் தனது கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு ஆதித்யா பாஸ்கரின் காதலை ஏற்று கொண்டு புதிய வாழ்க்கைக்கான பயணத்தை ஆரம்பிப்பது என உயிர் பிழைத்த காதலர்களின் கதையாக ஒரு கதை முடிகிறது !
திருமணமாகி சில மாதங்கள் ஆன வினோத் கிஷனும் அவரது மனைவியான அபிராமி வெங்கடாச்சலமும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென உடல் நிலை பாதிக்கப்படும் காதல் மனைவியை பிரிய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார் வினோத் கிஷன்.
உயிருக்கு போராடும் மனைவியின் நிலையை எண்ணி எப்போதும் மன கலக்கத்துடன் இருக்கும் வினோத் கிஷன், உயிரோடு இருப்பேனா?, இல்லையா? என தெரியாமல் காதலனை தைரிய படுத்தும் அபிராமி வெங்கடாச்சலம்,,,, முடிவில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து இறந்து விடும் அபிராமி வெங்கடாச்சலத்தின் நினைவுடன் வாழும் வினோத் கிஷன் என திருமணமாகியும் வாழ்ந்த காதலர்களின் கதையாக மற்றொரு கதை முடிகிறது !
மூன்றாவதாக நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்த டெல்லி கணேஷ் - லீலா சாம்சன் தம்பதிகளின் வாழ்க்கையில் லீலா சாம்சனின் இருதய பிரச்சனையில் அவரை காப்பாற்ற பணத்திற்காக போராடுகிறார் டெல்லி கணேஷ்.
மற்றொரு பக்கம் லீலா சாம்சன் தான் இறக்கப் போவதை விட, தனக்குப் பிறகு தனது கணவரை யார் பார்த்துக்கொள்வார் என்ற கவலையுடன் டெல்லி கணேஷை ஆதரவாக அரவணைக்கும் காட்சிகளில் வாழ்கிறார் லீலா சாம்சன் . முடிவில் உயிர் பிழைத்த லீலா சாம்சனுடன் இயல்பான காட்சிகளால் உணர்வு பூர்வமான நடிப்பில் வயது முதிர்ந்த காதலனாக அசத்துகிறார் டெல்லி கணேஷ்.
ஆர் 2 பிரதர்ஸின் இசையும், ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
தோல்வியில் முடிவடைந்து மீண்டும் பூக்கும் இருவரது காதல் கதை , திருமணமாகியும் வாழ்ந்த காதலர்களின் வாழ்க்கை தோல்வியில் முடிவடையும் மற்றொரு கதை , நாற்பது ஆண்டு கால திருமண பந்தத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மனைவியை காப்பாற்ற போராடும் கணவனின் கதை என வெவ்வேறு உணர்வுகளை கொண்ட கதைகளுடன்,,,, அழுத்தமான திரைக்கதை அமைப்புடன்,,,, இயல்பான வசனங்களுடன்,,,, அனைவருக்கும் பொதுவான காதலை வாழும் வாழ்வியலின் அழகுடன் படமாக்கிய காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் இயல்பான படமாக பாராட்டும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.எம்.முருகேஷ்.
ரேட்டிங் ; 3 / 5
’வான் மூன்று ’ - மூன்று வகை காதலின் பரிணாமங்கள் !
Kommentare