top of page

'ஜெயிலர்' - ரசிகர்கள் கொண்டாடும் படமா ? அல்லது திண்டாடும் படமா ? - விமர்சனம் !

mediatalks001


அரக்கோணத்தில் உள்ள ஒரு கோயிலில் தெய்வ சிலை ஒன்று சிலை திருடும் கும்பலால் திருடப்படுகிறது .


ஓய்வு பெற்ற ஜெயிலர் ரஜினிகாந்தின் மகனான போலீஸ் கமிஷனர் வசந்த் ரவி,,, சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த சரவணனை பிடித்து அடி பின்னி எடுக்கிறார் .


ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் ரஜினிகாந்த் பேரனை பள்ளிக்கு அழைத்து செல்வது, பேரனின் யூ tube சேனலுக்காக பேரனை வீடியோ எடுப்பது என தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் தீவிர விசாரணையை மேற்கொள்ளும் வசந்த் ரவியை தீர்த்துக்கட்ட சிலை கும்பல் தலைவனான விநாயகன் அவரை கடத்துகிறார் .


காணாமல் போன வசந்த் ரவியை தேடும் மேலிடம் மன அழுத்த பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் கேஸை முடிக்கிறது .


தன் மகனை கடத்தியவர்களை கண்டுபிடித்து பழி வாங்க ஓய்வில் இருக்கும் கண்டிப்புமிக்க ஜெயிலரான ரஜினிகாந்த் கடத்தல் கும்பலை தேடுகிறார் !


முடிவில் வசந்த் ரவியை கடத்தியவர்களை ரஜினிகாந்த் பழி வாங்கினாரா ? கடத்திய வசந்த் ரவியை சிலை கும்பல் தலைவனான விநாயகன் என்ன செய்தார் ? என்பதை சொல்லும் படம்தான் 'ஜெயிலர்'


கதையின் நாயகனான ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடும் அதிரடி நாயகனாக படம் முழுவதும் ஜொலிக்கிறார் !

இந்த படத்தின் ஹிட் மூலம் தான் எப்பொழுதும் மாஸான சூப்பர் ஸ்டார் என மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்!!


ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் . நேர்மையான அதிகாரியாக வசந்த் ரவி , மிர்ணா மேனன் ,மாஸ்டர் ரித்விக் இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், தமன்னா , விநாயகன், ஜாக்கி ஷராப் .யோகி பாபு , வி டி வி கணேஷ் ,சுனில் , நாக பாபு , பில்லி முரளி ,கிங்ஸ்லி என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் !


படத்திற்கு பலமாக விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு!


அனிருத்தின் இசையில் தமன்னா ஆடும் குத்து பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களும் இரைச்சல் !!

பின்னணி இசை கதைக்கேற்றபடி அமைத்துள்ளார் !


தன் மகனை கடத்தியவர்களை கண்டுபிடித்து பழி தீர்க்கும் ஜெயில் அதிகாரி இந்த கதையை மையமாக வைத்து

முதல் பாதி முழுவதும் விறு விறுப்பாக நகரும் கதையில் ,,,,, இடைவேளைக்கு பின் திசை மாறும் திரைக்கதையின் அமைப்பினால் படத்தின் சுவாரஸ்யம் குறைகிறது . எதிர்பாராத திருப்புமுனை என்ற பெயரில்

ஏற்கனவே பார்த்து பழகி போன படத்தின் கதையை படத்தின் கிளைமாஸாக முடிக்கிறார் இயக்குனர் .


மற்றபடி,,,, சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக டார்க் காமெடியுடன் ஆக்க்ஷன் கலந்த அதிரடி படமாக,,,,,,,,, ரசிகர்களுக்கு,,,,,,, விருந்து படைத்துள்ளார் இயக்குனர் நெல்சன் !


ரேட்டிங் ; 3 / 5







Comments


©2020 by MediaTalks. 

bottom of page