top of page

‘3.6.9’ - விமர்சனம் !


Casting : K.Bhagyaraj, PGS, Black Pandi, Angayar Kannan, Alam Sha, Naresh, Sohail, Rajashree, Sakthivel, Subiksha, Jai, Karthik, Praveen, Rishi, Balu, Shree


Directed By : Shiva Madhav


Music By : Karthik Harsha


Produced By : PGS Productions and Friday Film Factory


கே.பாக்யராஜ் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்று திருச்சபையை நடத்தி வருகிறார் .


இந்நிலையில் கே. பாக்யராஜ் மக்களுடன் சேர்ந்து திருச்சபை வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், துப்பாக்கி ஏந்திய ஒரு குழுவினர் உள்ளே நுழைந்து தேவலாயத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களில் சிலரை துப்பாக்கியால் கொல்கின்றனர்.

தேவாலய பாதிரியாராக இருக்கும் கே.பாக்யராஜ் உண்மையில் அறிவியல் விஞ்ஞானி என்பதை அறிந்து கொண்ட அந்த கும்பலின் தலைவன் பிஜிஎஸ் பாக்யராஜிடம் உள்ள முக்கியமான உபகரணத்தை கைப்பற்ற முயற்சிக்கிறான்.


முடிவில் கும்பலின் தலைவன் பிஜிஎஸ் மிரட்டலினால் பாக்யராஜிடம் தன்னிடம் உள்ள முக்கியமான உபகரணத்தை அவரிடம் ஒப்படைத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘3.6.9’.


கிறிஸ்தவ பாதிரியாராக நடிக்கும் கே.பாக்யராஜ் அனுபவ நடிப்பால் அமைதியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்


மிரட்டல் வில்லனாக முக்கியமான வேடத்தில் நடிக்கும் பிஜிஎஸ் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்திருக்கிறார்


பிளாக் பாண்டி, அங்கையர் கண்ணன், அலம் ஷா, நரேஷ், சோஹைல், ராஜஸ்ரீ, சக்திவேல், சுபிக்‌ஷா, ஜெய், கார்த்திக், பிரவீன், ரிஷி, பாலு, ஸ்ரீ என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் மாரஸ்வரன் மோகன் குமார் ஒளிப்பதிவும் , இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷாவின் இசையும் படத்திற்கு பக்க பலம் !


விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பை துப்பாக்கி ஏந்திய ஒரு குழு மிரட்டி கைப்பற்ற நினைக்கும் கதையை மையமாக கொண்டு,,, சில காட்சிகளுக்கு பின் ரசிக்கும்படியான அறிவியல் விஞ்ஞான காட்சிகளுடன் இயல்பான கதையில் எளிமையாக அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குநர் ஷிவ மாதவ்.


ரேட்டிங் ; 2. / 5



Comments


©2020 by MediaTalks. 

bottom of page