பள்ளியில் படிக்கும்போதே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ஜிவி பிரகாஷ் பின்னாளில் நண்பர்களின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார் .
ஒரு கட்டத்தில் வாழ பிடிக்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஜிவி பிரகாஷ் மிக பெரிய பின்னணி பாடகியாய் இருக்கும் தனது பள்ளி பருவ காதலி கெளரி கிஷன் ஒரு பேட்டியில் பாடுவதை டிவியில் பார்க்கிறார்.
பேட்டியின்போது பள்ளி பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வை அவர் சொல்வதால் மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆசையில் கெளரி கிஷனை சந்திக்க முயற்சிக்கிறார். ஆனால், அவருக்கு ஜிவி பிரகாஷை யார் என்று தெரியாது என்கிற நிலையில், தன் காதலை எப்படியாவது அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பவர், அதற்கான சந்தர்ப்பம் வரும்போது விபத்தில் சிக்கி மயக்கமடைகிறார்.
கண் விழிக்கும் போது வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார். இதே சென்னைதான் – ஆனால் அது மெட்ராஸ் என்று அழைக்கப்படுகிறது. அங்கே இதுவரை பார்த்திராத பனி பொழிவு உள்ளிட்ட பல மாற்றங்கள் எல்லாம் நடக்க அந்த உலகத்தில் ஜிவி பிரகாஷின் பெயர் கூட வேறு பெயராக இருக்கிறது. அதே சமயம், ஜிவி பிரகாஷ் மனதில் வைத்திருந்த காதலி கெளரி கிஷன், மனைவியாக இருக்கிறார்
இது கனவா? அல்லது நிஜமா? என்ற குழப்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் ,,,மீண்டும் பழைய உலகுக்குள் பிரவேசிக்க, அங்கே அவருடைய காதலி, நண்பனின் காதலியாக இருப்பதுடன் , அவருக்கு திருமண வேலைகளும் நடக்கிறது முடிவில் இரு வேறு உலகக் கதைகளின் பின்னணியுடன் இறுதி வரை இருவரும் இணைகிறார்களா? இல்லையா? என்பதை பரபரப்பான கிளைமாக்ஸுடன் எதிர்பார்ப்புடன் சொல்லும் படம் தான் ‘அடியே’
பள்ளி மாணவனாகவும், இளைஞராகவும் உடல் மொழியில் நடிப்பில் அசத்தும் ஜிவி பிரகாஷ் குமார். தலை முடி, மீசை தாடி என காதலியை நினைத்து உருகும் இளைஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்கிறார் .
அமைதியான அழகில் நாயகியாக நடிக்கும் கெளரி கிஷன் கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.
வெங்கட் பிரபு ,ஆர்ஜே விஜய்,மதும்கேஷ் ,சுவேதா வேணுகோபால் என நடித்த கலைஞர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் ஒளிப்பதிவும் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்.
யோவான் பட வெற்றி விழா, வேகப்பந்து வீச்சாளராக இயக்குநர் மணிரத்னம் , பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளராக இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கியது, கூல் சுரேஷ் ஊமை, ஹுண்டாய் நிறுவனத்தின் பேஸ்ட், பிரதமராக கேப்டன் விஜயகாந்த் என ரசிக்க கூடிய காட்சிகளால் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது .
டைம் டிராவல், டைம் லூப், சயின்ஸ் ஃபிக்ஷன் போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட பட வரிசையில் பேர்லல் யூனிவர்ஸ் என்ற அறிவியல் ரீதியான கதையில் விறு விறுப்பான திரைக்கதையுடன் வேறு உலகத்தில் நடக்கும் மாறுதலான சம்பவங்களை நகைச்சுவையாக ரசிகர்கள் ரசிக்கும் காட்சிகளுடன் இயல்பான காதலின் அழகோடு அனைவரும் ரசிக்கும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்,
ரேட்டிங் ; 3.5 / 5
'அடியே' ரசிகர்கள் ரசிக்கும் அறிவியல் கலாட்டா !
Comments