top of page
mediatalks001

'கிங் ஆஃப் கொத்தா' - விமர்சனம் !

Updated: Aug 27, 2023



பிரிட்டிஷ் காலத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் இடம் கொத்தா. ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அங்கு குடியேறுகிறார்கள்.


இந்நிலையில் ஒரு காலத்தில் குற்றவாளிகளை தண்டிக்கும் இடமான கொத்தா மக்கள் அலறும் குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாக உருவாகிறது.


மேலும் போதைப் பொருள் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் தாதா சபீரின்

கட்டுப்பாட்டில் கொத்தா மாறுகிறது .


இந்நேரத்தில் கொத்தாவிற்கு புதிய காவல் அதிகாரியாக பிரசன்னா வருகிறார்.


கொடூர கொலைகாரனான சபீர் செய்யும் அராஜகங்களை தெரிந்து கொள்ளும் பிரசன்னா, சபீரின் எதிரியான அவரது முன்னாள் நண்பனான துல்கர் சல்மானை பற்றித் தெரிந்து கொள்கிறார்.


சபீரின் அராஜகத்தை அழிக்க யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டே போன துல்கர் சல்மானை மீண்டும் கொத்தாவிற்கு வரவழைக்க பிரசன்னா திட்டம் போடுகிறார்.


முடிவில் பிரசன்னா திட்டப்படி கொத்தாவை விட்டு போன துல்கர் சல்மான் மீண்டும் கொத்தாவிற்கு வந்தாரா? யாருக்கும் தெரியாமல் கொத்தாவை விட்டு வெளி மாநிலத்தில் துல்கர் சல்மான் வாழ காரணம் என்ன? துல்கர் சல்மானுக்கும் , சபீருக்கும் இடையே நடந்த பிரச்சனை என்ன என்பதை சொல்லும் படம்தான் 'கிங் ஆஃப் கொத்தா'


படத்தில் நாயகனாக நடிக்கும் துல்கர் சல்மான் ஆர்ப்பாட்டமில்லாத அதிரடி நாயகனாக அனுபவ நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் !


மிரட்டும் வில்லனாக தோன்றும் சபீர் , துல்கர் சல்மானின் தந்தையாக நடிக்கும் ஷம்மி திலகன்,காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கோகுல் சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்தர் என நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் !


ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் ,ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மானின் இசையும் படத்திற்கு பக்க பலம்


ரவுடிகளின் சாம்ராஜ்யத்தை மையமாக கொண்ட கதையுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி.

ஆக்க்ஷன் கலந்த விறுவிறுப்பான திரைக்கதையாக இருந்தாலும் ,,, எடிட்டிங்கில் இயக்குனர் கவனம் வைத்து காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் சிறந்த ஆக்க்ஷன் பட வரிசையில் இந்த படமும் அமைந்திருக்கும்.


ரேட்டிங் ; 3 / 5



Comments


bottom of page