’லக்கி மேன்’ - விமர்சனம் !
- mediatalks001
- Sep 1, 2023
- 2 min read

Casting : Yogi Babu, Raichal Rabecca, Veera , Abdul Lee
WRITER & DIRECTOR: BALAJI VENUGOPAL
MUSIC: SEAN ROLDAN
CINEMATOGRAPHER: SANDEEP K. VIJAY
EDITOR: G. MADAN
ART DIRECTOR: SARAVANAN VASANTH
PRODUCED BY THINK STUDIOS
பள்ளி பருவத்திலிருந்தே எதிலும் தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நினைத்து வாழும் யோகி பாபு ,,,,,வாலிப வயதில் மனைவி ரேய்ச்சல் ரபேகா 10 வயதில் மகன் என ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.
இந் நிலையில் அவர் வேலை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் குலுக்கலில் பம்பர் பரிசாக கார் ஒன்று கிடைக்கிறது.
அந்த காரை தனது முதல் அதிர்ஷ்டம் என்று கொண்டாடும் யோகி பாபு, தொழிலில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார ரீதியாகவும் உயர்வடைகிறார்.
ஒரு கட்டத்தில் தியாகி ராகுல் தாத்தா வீட்டு முன் அவரது அனுமதியுடன் அதிர்ஷ்டமாய் நினைக்கும் காரை தினமும் விட்டு செல்கிறார் யோகி பாபு.
இந்நேரத்தில் தியாகியை கலெக்டர் பார்க்க வருவதால் அங்கு நிற்கும் காரினால் இன்ஸ்பெக்டர் வீராவுக்கும் யோகி பாபுவுக்கும் பிரட்சனை ஏற்பட,,,
அந்த நேரத்தில் அங்கு வரும் கலெக்டர் முன்னிலையில் யோகி பாபுவால் அவமான படுகிறார் இன்ஸ்பெக்டர் வீரா.
இந்த பிரட்சனை தின செய்திகளில் பிரசுரமாகி அனைவருக்கும் தெரிய ,,,வீராவின் கோபத்திற்கு ஆளாகிறார் யோகி பாபு.
இச் சூழ்நிலையில் யோகி பாபுவின் அதிர்ஷ்ட கார் திடீரென்று காணாமல் போகிறது? காணாமல் போன காரினால் நிலைகுலைந்து போகும் சமயத்தில் அவரது வேலையும் பறி போகிறது !
முடிவில் காணாமல் போன கார் மீண்டும் யோகி பாபுக்கு கிடைத்ததா? காரை திருடிய மர்ம நபர் யார் ? என்பதை சொல்லும் படம்தான் ’லக்கி மேன்’
கதையின் நாயகனாக கதாபாத்திரத்துடன் இணைந்து இயல்பான நடிப்பில் பாராட்டும்படி நடித்திருக்கிறார் யோகி பாபு . காமெடி நடிகராக சில காட்சிகளில் நகைச்சுவையான வசனங்களால் சிரிக்க வைத்தாலும் .. உணர்வுபூர்வமான நடிப்பினால் குணசித்திர நடிகராக முத்திரை பதிக்கிறார் .
யோகி பாபுவின் மனைவியாக நடிக்கும் ரேய்ச்சல் ரபேகா கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வீரா, அப்துல் லீ, ஆர் எஸ் சிவாஜி ,ஜெயக்குமார் ,கெளதம் சுந்தர்ரராஜன் ,அமித் பார்கவ் ,சாத் விக் , சுஹாசினி குமரன் , விலங்கு ரவி ,டேவிட் சாலமன் ,அஜித் கோஷி , ராகுல் தாத்தா ,ஹலோ கந்தசாமி என நடித்தவர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சந்தீப் கே.விஜயின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பக்க பலம் !
எப்போதும் தன்னை அதிர்ஷ்டமில்லாதவன் நினைக்கும் ஒருவனது வாழ்க்கையில் பரிசாக கிடைக்கும் காரினால் ஏற்படும் சந்தோஷமான மாற்றங்கள் இந்த கதையை மையமாக கொண்டு ஆரம்பத்தில் விறு விறுப்பாக செல்லும் திரைக்கதையில் இடைவேளைக்கு பின் சில காட்சிகளின் வேகம் குறைந்தாலும் யோகி பாபுவின் ஆளுமையான நடிப்பில் அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.
ரேட்டிங் ; 3 / 5
Comments