நாயகன் விஜய் தேவரகொண்டா அரசாங்க வேலை கிடைத்ததால் காஷ்மீருக்கு செல்கிறார். காஷ்மீரில் நாயகி சமந்தாவை சந்திக்கும் விஜய் தேவரகொண்டா சமந்தாவின் அழகில் மயங்கி கண்டதும் காதல் வயப்படுகிறார்.
தன் மேல் வைத்துள்ள அதிக அன்பால் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவை காதலிக்க,,,, பெற்றோர்கள் ஒப்புதலுடன் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.
எல்லாம் அறிவியல் சம்பந்தமான சக்திதான் கடவுள் சக்தி என்று எதுவும் இல்லை என சொல்லும் பிரபல நாத்திகவாதியான சச்சின் கேடகெரின் மகன்தான் விஜய் தேவரகொண்டா.
ஜோதிடத்தில் புகழ் பெற்ற சொற்பொழிவாளர் பிராமணர் முரளி சர்மாவின் மகள்தான் சமந்தா.
சச்சின் கேடகெரும் ,,முரளி சர்மாவும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க,,,, இவர்களின் எதிர்ப்பை மீறி விஜய் தேவரகொண்டா, சமந்தா திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் விஜய் தேவரகொண்டா - சமந்தா தம்பதிகளின் வாழ்க்கையில் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
ஜாதக தோஷத்தினால் ஏற்படும் இப் பிரச்சனைக்கு பரிகாரமாக தந்தை சொல்லும் ஹோமம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என சமந்தா நம்ப, விஜய் தேவரகொண்டா அதை ஏற்க மறுக்கிறார்.
இப் பிரச்சனையில் இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாட்டினால் சமந்தா விஜய்தேவரகொண்டாவை விட்டு பிரிந்து விட,,,,
முடிவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தார்களா ?
குழந்தையின்மை பிரச்சனைக்கு சமந்தா சொல்லும் ஹோமத்தை நாத்திகரான விஜய் தேவரகொண்டா செய்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் 'குஷி'
நாயகனாக நடிக்கும் விஜய் தேவரகொண்டா துறுதுறு இளைஞராக இளமை துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
நாயகியாக நடிக்கும் சமந்தா ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பில் கதைக்கேற்றபடி சிறப்பாக நடிக்கிறார் .
சச்சின் கேடகெர் ,,,முரளி சர்மா ,,,சமந்தாவின் பாட்டியாக நடிக்கும் லட்சுமி, ஜெயராம் - ரோகிணி, சரண்யா பொன்வண்ணன் என அனைவரது நடிப்பும் இயல்பாக உள்ளது .
ஒளிப்பதிவாளர் முரளி.ஜி ஒளிப்பதிவும் ,,இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வாஹப்பின் பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர்.
காதலை மையமாக கொண்ட கதையுடன் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் ஏற்படும் பிரச்சனைகளை இயல்பான திரைக்கதையுடன் நாத்திகமும் ஆத்திகமும் பாசத்திற்கு பிறகுதான் என்ற வாழ்வின் அழகியலுடன் அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா நிர்வாணா.
காதலர்கள் கொண்டாடும் இளமை ததும்பும் 'குஷி'
ரேட்டிங் ; 3.5 / 5
コメント