குறிஞ்சி மலை வனப்பகுதியில் உள்ள விடுதியில் நாயகன் ஸ்ரீபதி - நாயகி நியா மற்றும் மேலும் பல விருந்தினர்கள் தங்குகிறார்கள்.
பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த விடுதியில்,, இருக்கும் ராணி பங்களா மட்டும் பூட்டியே இருக்கும் நிலையில், விடுதியின் மானேஜராக பொறுப்பேற்கும் அங்காடி தெரு மகேஷ் இரவில் நடைபெற இருக்கும் விருந்து நிகழ்ச்சிக்காக நீண்ட வருடங்களாக மூடி கிடக்கும் அந்த அறையை திறந்து சுத்தப்படுத்துகிறார்
அந்த விருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருந்த இரண்டு பெண்கள் காணாமல் போகின்றனர் , இப் பிரச்சனையால் நாயகன் ஸ்ரீபதியும், மற்றொரு விருந்தினரும் அடித்துக்கொள்கிறார்கள்.
அப்போது,அந் நேரத்தில் அங்கு வரும் போலீஸ் அதிகாரி சத்யராஜ், நடத்தும் விசாரணையில் மர்மமான பல தகவல்கள் அவருக்கு கிடைக்கிறது மேலும் அந்த விடுதியில் அமானுஷ்ய சக்தி ஒன்று அடிக்கடி அனைவரையும் பயமுறுத்துகிறது.
முடிவில் காணாமல் போன பெண்களை சத்யராஜ் கண்டுபிடித்தாரா? அனைவரையும் பயமுறுத்தும் அந்த அமானுஷ்ய சக்தி யார்? என்பதை சொல்லும் படம் தான் 'அங்காரகன்'
அதிவீரபாண்டியன் என்கிற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சத்யராஜ் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் அவரது பாணியில் அசத்துகிறார் .
நாயகனாக நடிக்கும் ஸ்ரீபதி புதுமுகம் என்றாலும் நடிப்பு, ஆட்டம், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் தேர்ந்த நடிகரை போல நடித்திருப்பது பாராட்டுக்குரியது
நாயகியாக நடிக்கும் நியா அமைதியான அழகில் இயல்பாக நடித்திருக்கிறார். அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் என நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
கு.கார்த்தியின் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் ஓகே ரகம் !
அடர்ந்த வன பகுதியில் உள்ள விருந்தினர்கள் தங்கும் விடுதியில் நடக்கும் திகில் கலந்த மர்ம பின்னணி கொண்ட கதையை வைத்து கருந்தேள் ராஜேஷின் கதைக்கு நாயகன் ஸ்ரீபதி அமைத்த அழுத்தமில்லாத திரைக்கதையுடன் ,, மர்ம கதையை எடுக்கும் முயற்சியில் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன் டச்சு.
ரேட்டிங் ; 2 / 5
Comments