
நாயகன் ஷரத்தும் ,,அவரது நண்பர்களும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் . தங்களிடம் இருக்கும் கால்பந்து விளையாட்டின் திறமையினால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது தான் இவர்களது லட்சியம்.
இந் நிலையில் கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தட்சிணாமூர்த்திக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு ஒழுங்காக நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
கால் பந்து விளையாட தெரிந்த இளைஞர்களது மனநிலை அறிந்த மதன் தட்சிணாமூர்த்தி தனக்கு தெரிந்ததை ஏழை இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களின் நிலையை மாற்றும் பணியில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையில் இவர்களில் ஒருவரான நாயகன் சரத், நாயகி அய்ராவை காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் மதன் தட்சிணாமூர்த்தியின் பயிற்சியினால் ஷரத் மற்றும் அவரது நண்பர்கள் சிறப்பான கால்பந்தாட்ட வீரர்களாக உருவாவதோடு, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் விளையாடும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.
அப்போது இளைஞர்களின் உயர்வை தடுக்கும் வில்லன் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் எப்படி மேல் மட்டத்திற்கு வரலாம் என்ற ஆதிக்க வர்க்கத்தில் அந்த இளைஞர்களை தேர்ந்தெடுக்கவிடாமல் மிரட்டி தடுத்துவிடுகிறார்.
வில்லனின் ஆதிக்கத்தால் நாயகன் ஷரத் மற்றும் அவரது நண்பர்களின் இந்தியன் சூப்பர் லீக் கால் பந்தாட்ட கனவு நிறைவேறாமல் போகிறது .
முடிவில் கொந்தளிக்கும் இளைஞர்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் அவர்களது வாழ்க்கையின் நிலை என்ன ?என்பதை சொல்லும் படம்தான் தான் ‘எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’

நாயகனாக நடிக்கும் புதுமுகம் ஷரத் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்திலும் இயல்பான நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !
நாயகியாக நடிக்கும் அய்ரா அமைதியான அழகில் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார்
கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கும் மதன் தட்சிணாமூர்த்தி தனது சிறப்பான நடிப்பு மூலம் கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் !
வில்லனாக நடித்திருக்கும் நரேன், கஞ்சா கருப்பு, இளையராஜா.எஸ், முத்து வீரா என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
அலிமிர்ஸாக் இசையும், வினோத் ராஜாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு உறுதுணை !!
கால்பந்தாட்ட விளையாட்டில் வீரர்களாக உருமாற துடிக்கும் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் ஆதிக்க வர்க்கத்தினரால் பழி வாங்கப்படும் கதையினை மையமாக வைத்து சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் வலி நிறைந்த ஏழை மக்களின் வாழ்வியலை சொல்லும் இயல்பான படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் எஸ்.ஹரி உத்ரா.
ரேட்டிங் ; 3 / 5
Kommentare