top of page
mediatalks001

"சந்திரமுகி 2" -பட விமர்சனம்!!


தொழிலதிபரான ராதிகா சரத்குமார் குடும்பத்தில்,,,,, பிரச்சனைகளை தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன


இதற்கு காரணம் காலம் காலமாக குலதெய்வத்தை வழிபடாமல் இருப்பதுதான் ,,,, குடும்பத்தில் உள்ள அனைவரும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீரும் என சாமியார் ராவ் ரமேஷ் சொல்கிறார்.


இவர்களது பிரச்சனை தீர குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்திரமுகி ஆத்மாவாய் வாழும் வடிவேலுவுக்கு சொந்தமான வேட்டையபுர அரண்மனைக்கு செல்கிறார்கள்.


இவர்களுடன் காதல் திருமணத்தால் ராதிகாசரத்குமாரை விட்டு பிரிந்து விபத்தால் உயிரிழந்த அவரது மகளின் பிள்ளைகளும், அவர்களின் பாதுகாப்பாளரான ராகவா லாரன்ஸும் குல தெய்வ வழிபாட்டிற்காக வேட்டையபுர அரண்மனைக்கு வருகிறார்கள் .


இந்நிலையில் அவர்களுடைய குலதெய்வ கோவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில்இருப்பதால் கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இரண்டு பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.


அந்த கோவிலில் வெளிச்சம் வருவதற்கு சந்திரமுகி விடமாட்டாள், மீறி முயற்சித்தால் மரணம் தான், என்று அப் பகுதியில் வாழும் பழமையான சித்தர் ஒருவர் ராதிகா சரத்குமாரின் குடும்பத்திரனருக்கு எச்சரிக்கிறார்.


இந்நேரத்தில் குலதெய்வ கோவிலில் பூஜை செய்தால் மட்டுமே குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்பதால் எப்படியாவது பூஜை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ராதிகாசரத்குமார் குடும்பத்தாருக்கு ராகவா லாரன்ஸ் உதவ முன் வருகிறார்.


அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாசரத்குமாரின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் செல்கிறது. இதையடுத்து லட்சுமி மேனன் உடலுக்குள் சென்ற சந்திரமுகியின் ஆத்மாவினால் பல அசம்பாவித சம்பவங்கள் அந்த அரண்மனையில் நடக்கிறது.


முடிவில் ராகவா லாரன்ஸ் ராதிகா சரத்குமாரின் குடும்பத்தை சந்திரமுகியின் ஆத்மாவிடமிருந்து காப்பாற்றினாரா ?


சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனின் உடலை விட்டு சென்றதா?


குல தெய்வ கோவிலில் ராதிகாசரத்குமார் குடும்பத்தினர் வழிபாடு செய்தார்களா? என்பதை சொல்லும் படம்தான் "சந்திரமுகி 2"


கதையின் நாயகனாக ராகவா லாரன்ஸ் பாண்டியனாக காதல் , காமெடி , டான்ஸ் என வழக்கமான பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் இரண்டாம் பாதிக்கு பின் வில்லத்தனமான நடிப்பில் வேட்டைய மன்னனாக இயல்பான நடிப்பில் அசத்துகிறார் .


சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரணாவத் கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் நடிக்கிறார் .


வேட்டையபுர அரண்மனையின் உரிமையாளராக வடிவேலு வரும் காட்சிகளில் சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது !!!


ராதிகா சரத்குமார் ,ராவ் ரமேஷ் , லட்சுமி மேனன் ,மஹிமா நம்பியார், ஸ்ருதி டாங்கே, சுபிக்‌ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ், ஆர் எஸ் சிவாஜி , மனோபாலா, ஒய் ஜி ,மஹேந்திரன் என நடித்தவர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !


எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் . பின்னணி இசை கதைக்கு பக்க துணை !



சந்திரமுகியின் முதல் பாகத்தின் கதையில் வடிவேலுவை தவிர மற்ற கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி இடைவேளைக்கு பின் சந்திரமுகியின் வாழ்க்கையை விறு விறுப்பான திரைக்கதையுடன் பேரழகி சந்திரமுகிக்காக வேட்டைய மன்னனை வீழ்த்தி செங்கோட்டையனாக இருக்கும் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக உருமாறுவது என ரசிக்க வைக்கும் காட்சிகளுடன் குடும்பத்துடன் அனைவரும் கண்டு களிக்கும் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் பி.வாசு.



ரேட்டிங் ; 3 . 5 / 5


சுவாரஸ்யமான கதை களத்தில் விறு விறுப்பான "சந்திரமுகி 2"





Comments


bottom of page