நாயகன் விக்ரம் ரமேஷ் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் ஒருநாள் இரவு பாரில் இருந்து நாயகி சுவயம்சித்தா வாடிக்கையாளராக விக்ரம் ரமேஷ் காரில்ஏறுகிறார்.
இருவரும் காரில் பயணம் செய்யும் போது சுவயம்சித்தா விக்ரம் ரமேஷிடம் சகஜமாக பேசியதால் இருவரும் நண்பர்களாகின்றனர்.
வீட்டருகே கார் நின்றதும் சுவயம்சித்தா விக்ரம் ரமேஷை வீட்டிற்கு மது குடிக்க அழைக்கிறார்.
விக்ரம் ரமேஷும் அவரின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு செல்கிறார்.
இருவரும் மது குடித்துக் கொண்டு போதையில்சரச சல்லாபத்தில் இருவரும் ஒன்றாக இணைய,,,,,,எல்லாம் முடிந்ததும் பாத்ரூமை நோக்கி செல்கிறார் சுவயம்சித்தா .
இந்நேரத்தில் மற்றொரு அறையில் யாரோ ஒருவரது பிணம் இருப்பதை கண்டு விக்ரம் ரமேஷ் அதிர்ச்சியடைகிறார்.
இதனால் அலறிப்போகும் விக்ரம் ரமேஷ் வீட்டில் இருந்து தப்பிக்க முயல,,,,. லாக் சிஸ்டத்தில் வீட்டின் கதவு சென்சார் நம்பர் செயல்படாததால் அவரால் தப்பிக்க முடியாமல் தவிக்கிறார் .
இந்நிலையில் விக்ரம் ரமேஷ் தப்பிக்க முயற்சிப்பதை சுவயம்சித்தா பார்த்து விட ,,இருவருக்கும் இடையில் ஏற்படும் தள்ளுமுள்ளில் கீழே விழுந்து இறந்து விடுகிறார் சுவயம்சித்தா.
மற்றொரு பக்கம் சுவயம்சித்தா வீட்டிற்கு வீட்டு கதவின் லாக் சிஸ்டம் சென்சார் நம்பர் தெரிந்த கார்த்திக் வெங்கட்ராமன் திருட வருகிறார் .
இதற்கு பின் சுவயம்சித்தாவின் நண்பரான அரசியல்வாதியான சிவகுமார் ராஜு ஆயிரக்கணக்கான பணத்துடன் குடி போதையில் பிரச்சனையான வீட்டிற்குள் நுழைகிறார் .
இக் கட்டான இந்நேரத்தில் மூன்று பேரும் அந்த வீட்டுக்குள் மாட்டி கொள்ள அவர்கள் தப்பித்தார்களா? முடிவில் மூன்று பேரின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம் தான் ‘எனக்கு எண்டே கிடையாது’.
படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் விக்ரம் ரமேஷ் ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதையை மிக அழகாக படம் முழுவதும் காட்சிக்கு காட்சி வேறுபடுத்தி சுவாரஸ்யமாக அதே நேரத்தில் திகில் கலந்த கிரைம் திரில்லராக மிக திறமையாக பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார்
நாயகியாக நடிக்கும் சுவயம்சித்தா இளசுகளை ஏங்க வைக்கும் நடிப்பில் அசத்துகிறார்
எம்.எல்.ஏ-வாக நடிக்கும் சிவகுமார் ராஜு, திருடனாக நடிக்கும் கார்த்திக் வெங்கட்ராமன் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கலாச்சரணின் இசையும் ,ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினத்தின் கலர்புல்லான ஒளிப்பதிவும், படத்தொகுப்பாளர் முகன்வேலின் கச்சிதமான படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் .
ரேட்டிங் ; 3.5 / 5
Comments