top of page

'இறுகப் பற்று' - பட விமர்சனம்!

Updated: Oct 8, 2023



குடும்ப பிரச்சனைகளால் விவாகரத்து செய்ய முன்வரும் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் மூலம் அறிவுரை வழங்கி பிரிந்து வாழ நினைக்கும் தம்பதிகளை சேர்த்து வைக்கிறார் மனநல ஆலோசகரான விக்ரம் பிரபுவின் மனைவி ஸ்ரத்தா ஶ்ரீநாத் .

ஐ டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விதார்த், தனது மனைவி அபர்ணதி எந்த நேரத்திலும் சாப்பிட்டு கொண்டு குண்டாக இருப்பதால் அவரை பிடிக்காமல் அபர்ணதியை விவாகரத்துசெய்ய நினைக்கிறார் .

இப் பிரச்சனையால் அபர்ணதி மனநல ஆலோசகரான ஸ்ரத்தா ஶ்ரீநாத்தை சந்திக்க அவரது சொல்படி விதார்த்திடம் விவாகரத்து செய்ய ஒப்பு கொள்கிறார்.


மற்றொரு பக்கம் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகளான ஸ்ரீயும், சானியாவும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றனர் .


ஒரு கட்டத்தில் ஸ்ரீயின் அணுகுமுறை உச்சத்துக்கு போக சானியாவும் ஸ்ரத்தா ஶ்ரீநாத்திடம் ஆலோசனை பெற அவரது இடத்துக்கு வருகிறார் .


இந்நிலையில் விக்ரம் பிரபுவுக்கு ஸ்ரத்தா ஶ்ரீநாத்தின் சில நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரும் ஸ்ரத்தா ஶ்ரீநாத்திடம் பிரச்சனை செய்து பேசாமல் இருக்கிறார் .


முடிவில் மூன்று தம்பதியினரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தார்களா ?


விவாகரத்து செய்து பிரிந்து வாழ முடிவெடுத்த விதார்த்தும் , சானியாவும் இறுதியில் என்ன செய்தார்கள் ? என்பதை சொல்லும் படம்தான் 'இறுகப் பற்று'


இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பில் விக்ரம் பிரபு. வாட்ஸ் அப் செயலி மூலம் மனைவியின் அன்பை அறிந்து மனமுடையும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


மனநல ஆலோசகராக நடிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிரச்சனைகளில் இருக்கும் தம்பதிகளிடம் குறைகளை கேட்கும் விதம், ஆலோசனை சொல்லும் விதம் , அமைதியாக இருக்கும் விக்ரம் பிரபுவிடம் கெஞ்சி கதறும்போதும் கதாபாத்திரத்துடன் இணைந்து இயல்பாக நடிக்கிறார் .


விதார்த் நடிப்பு திறமையை வெளிப்படுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். ஒரு காட்சியில் ஸ்ரத்தா ஶ்ரீநாத்திடம் தன் நிலைமையை சொல்லி அழும்போது குணசித்திர நடிகராக ரசிகர்களை கவர்கிறார் .


வெகுளித்தனமான நடிப்பில் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்திருக்கும் அபர்ணதி.


காதல் மனைவியுடன் அடிக்கடி பிரச்சனை செய்யும் ஶ்ரீ ,, விவாகரத்து என வரும்போது உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


ஶ்ரீயின் மனைவியான சானியா,,, காதல் , ஆத்திரம் , கோபம் , அழுகை என பல பரிமாண நடிப்பில் அசத்துகிறார்.


ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும் கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.


ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய்யின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல் .


கணவன் மனைவி இடையில் சாதாரணமாக நடக்கும் பிரச்சனைகள் தடம் மாறி பிரிந்து வாழ விவாகரத்து செய்ய கோர்ட்டு வரை படியேறுவதை கதையாக வைத்து படம் பார்க்கும் அனைவருக்கும் நம் வாழ்வில் நடந்த சம்பவம் என நினைக்குமளவில் அழுத்தமான திரைக்கதையுடன் ,,கணவன் -மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்தலை பாடமாக விளக்கி பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.


ரேட்டிங் ; 4 / 5







Comments


bottom of page