top of page

'மார்கழி திங்கள் ' - பட விமர்சனம்!


தாத்தா பாரதிராஜாவின் ஆதரவில் வளரும் ரக்க்ஷனா தாய் தந்தையை இழந்தவர்.


இந்நிலையில் பள்ளி மாணவர்களான நாயகன் ஷ்யாம் செல்வனும் , நாயகி ரக்‌ஷனாவும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.


முதல் மதிப்பெண் எடுப்பதில் இருவருக்கும் கடுமையான போட்டி ஏற்படுகிறது


இந்த போட்டி நாளடைவில் இவர்களுக்குள் காதலாக மாறுகிறது.


தன் காதலை தாத்தா பாரதிராஜாவிடம் ரக்க்ஷனா சொல்ல, அவரோ படிக்கும் காலத்தில் காதல் வேண்டாம். நீங்கள் படித்து முடித்த பிறகு உங்கள் இருவரது காதலை நான் சேர்த்து வைக்கிறேன் என்று கூறி படிக்க வைக்கிறார்.


பாரதிராஜா ரக்‌ஷனாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாலும், கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான் எல்லாமே ,,,, அதுவரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், பேசிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை போடுகிறார்.


இருவரும் பேசிக் கொள்ளாமல் பிரிந்து படிக்க செல்கிறார்கள். சில நாட்களுக்கு பின் நாயகி ரக்‌ஷனா படிப்பு முடித்து விட்டு தன் காதலன் ஷ்யாம் செல்வனை தேடுகிறார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.


முடிவில் நாயகன் ஷ்யாம் செல்வன் எங்கு சென்றார்? ரக்‌ஷனாவிடம் சொன்னபடி பாரதிராஜா இருவரையும் சேர்த்து வைத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'மார்கழி திங்கள்'


நாயகனாக நடிக்கும் ஷ்யாம் செல்வன் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


நாயகியாக நடிக்கும் அழகான ரக்க்ஷனா காதல் காட்சிகளிலும்,

பாரதிராஜாவிடம் தன் காதலை சொல்லும் காட்சிகளில் இயல்பான நடிப்பில் நடித்திருக்கிறார்.

நாயகியின் தாத்தாவாக நடிக்கும் இயக்குநர் பாரதிராஜா கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபவ நடிப்பால் முத்திரை பதிக்கிறார் .


நாயகியின் தாய்மாமனாக நடிக்கும் இயக்குநர் சுசீந்திரன் வில்லனாக நடிப்பில் மிரட்டல் .


இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் !


வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !


பள்ளி பருவத்தில் ஒன்றாக படிக்கும் மாணவர்களிடையே வரும் காதலை வைத்து,, ஜாதி வெறி கொண்ட கதையுடன் ஆணவ படுகொலையை திரைக்கதையுடன் இணைத்து,,, நடிக்கும் நடிக - நடிகையர் அனைவரையும் நடிப்பில் திறமையாக நடிக்க வைத்து எதிர்பாராத கிளைமாக்ஸுடன் படத்தை இயக்கியுள்ளார் மனோஜ் கே.பாரதிராஜா.


ரேட்டிங் ; 3 / 5













Comentários


bottom of page