
தன்னிடம் சண்டை போட்டு பிரச்சனை செய்து தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை கொலை வெறியோடு பள்ளியில் படிக்கும் மகன் செல்லப்பாண்டியுடன் அவள் இருக்கும் ஊருக்கு பேருந்தில் பயணித்து தன்னுடன் வாழ்க்கை நடத்த தன் மனைவியை அழைத்து வர செல்லும் குடிகார கணவனாகிய கருத்துடையான்.
முடிவில் ஊரிலிருந்து தனது மனைவியை எந்த பிரச்சனையில்லாமல் கருத்துடையான் அழைத்து வந்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'கூழாங்கல்'
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா தயாரிப்பில், பல சர்வதேச விருதுகளை வென்றதோடு, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமான ‘கூழாங்கல்’. சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது
கோபமாக இருக்கும் கருத்துடையானை பற்றி தெரிந்து கொண்ட சிறுவன் செல்லப்பாண்டி , கடும் வெயிலில் வறண்ட பூமியாய் இருக்கும் பொட்டல் காட்டில் நெடுந்தூரம் நடக்க வைத்து,, கீழே கிடக்கும் துண்டான கண்ணாடி மூலம் சூரிய வெளிச்சத்தின் மூலம் சூரிய ஒளியை அவர் மீது அடிப்பதும் , வழியில் நடந்து செல்லும் கரு நாகத்தை கண்டு கருத்துடையான் அலறுவதும் , அதே நேரத்தில்உச்ச கட்ட பகல் 12 மணி வெயிலில் கொலுசு அணிந்த பெண்ணை பார்த்து திரும்பியவுடன் அந்த பெண் மாயமாவதும் கிராமத்தின் இயல்பினை இருவரது நடைப்பயணத்தில், பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வியலை ஆழமான அழுத்ததுடன் , மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
கிராமத்து மண் மணம் மாறாத நடிகராக கணபதி கதாபாத்திரமாகவே இயல்பான நடிப்பால் படம் முழுவதும் வாழ்கிறார் கருத்துடையான்.
மகனாக நடிக்கும் சிறுவன் செல்லப்பாண்டி உணர்ச்சிகளால் அமைதியான முக பாவனைகளில் பாராட்டும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளான் .
ஒளிப்பதிவாளர்கள் விக்னேஷ் குமுலை மற்றும் ஜெய பார்த்திபன் ஆகியோரின் சிறப்பான ஒளிப்பதிவும் ,
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் கதைக்கு பக்க பலமாக இருக்கின்றன .
கிராமத்து மக்களின் அன்றாட வாழ்வியலை தெளிவாக சொல்லும் கதையுடன் ,, நாட்டில் இன்றைக்கும் வறண்ட பூமியில் விவசாயம் செய்ய முடியாமல் வறுமையில் துன்பப்படும் பாமர மக்கள் எலிக்கறி சமைத்து சாப்பிடும் அவலத்தையும்,, குறைந்த அளவு சுரக்கும் அழுக்கு படிந்த தண்ணீருக்காக காத்திருக்கும் பெண்கள் கூட்டத்தின் பரிதாபத்தையும் காட்சிகளில் சொல்வதுடன் புதிய களத்தில் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் ,,,, நீண்ட வருடங்களுக்கு பின் சத்யஜித்ரே ,, பாலு மகேந்திரா படங்களை பார்த்த உணர்வினை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறார் படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ்.
'கூழாங்கல்' - உலக பட தரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமா !
ரேட்டிங் ; 4.5 / 5
Comments