ராதாரவியின் மகளான ராஜலட்சுமி அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து சமூகத்திற்கு எதிராக கண் முன் நடக்கும் தவறை தட்டி கேட்கும் சுபாவம் கொண்டவர்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்காக நீதி கேட்டு நீதிமன்றம் வரை கூட செல்லக் கூடியவர். சிறு வயதில் ராதாரவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பல வருடங்களாக பேசாமல் இருக்கிறார்
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுமி ஒருவரை அதே குடியிருப்பில் இருக்கும் வசதி படைத்த ஒருவன் பாலியல் துன்புறுத்தல் செய்து விட, பாதிக்கப்பட்ட சிறுமிக்காக போராடும் ராஜலட்சுமிக்கு எதிரிகள் அதிகரிக்க தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்ஸ் வாங்க முயற்சி எடுக்கிறார்
காவல்துறை இவருடைய முன்கோபத்தை காரணம் காட்டி, அவருக்கு லைசென்ஸ் தர மறுத்து விடுகிறது.
இதனையடுத்து துப்பாக்கி லைசென்ஸ் வாங்க நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை போடுகிறார் ராஜலட்சுமி.
முடிவில் நீதிமன்றத்தில் ராஜலட்சுமிக்கு, துப்பாக்கி வாங்குவதற்கு லைசென்ஸ் அனுமதி கிடைத்ததா?, இல்லையா?என்பதை சொல்லும் படம்தான் ’லைசென்ஸ்’
கதையின் நாயகியாக பாடகி ராஜலெட்சுமி வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். கதாபாத்திரமாகவே கம்பீரமாக ஒரு சில இடங்களில் அதிகப்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் சிறப்பான நடிப்பினால் இயல்பாக நடிக்கிறார்.
தந்தையாக நடிக்கும் ராதாரவி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார் !
அபி நட்சத்திரா, என்.ஜீவானந்தம், நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி உள்ளது.. ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு காட்சிகள் தரம் !!
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் மையமாக கொண்ட கதையாக இருந்தாலும் அந்த கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்காக பெண்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ்’ வழங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதுடன் விறுவிறுப்பான அழுத்தமான திரைக்கதை அமைப்பில் பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் கணபதி பாலமுருகன்
.ரேட்டிங் ; 3 / 5
Comments