top of page

' ரெய்டு' - விமர்சனம்


நகரில் தாதாக்களாக உலா வரும் ரவுடிகளை சுட்டு தள்ளுவதில் வல்லவராக இருக்கிறார் போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு.


அட்டுழியம் செய்து மக்களை அலற வைக்கும் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார்.


இந்நிலையில் தாதாவான வேலு பிரபாகரனிடம் அடியாட்களாக இருந்து தனியாக ரவுடிசம் ஒன்றாக செய்து வரும் சவுந்தரராஜா,, ரிஷி செய்த சம்பவம் புகாராக விக்ரம் பிரபுவிடம் தெரிவிக்கப்படுகிறது


ஒரு கட்டத்தில் ரவுடி ரிஷியின் தம்பி டேனியலை விக்ரம் பிரபு அவமானப்படுத்தி என்கவுண்டர் செய்கிறார்.


தம்பி டேனியலை விக்ரம் பிரபு என்கௌண்டரில் சுட்டு கொல்வதால் கோபம் அடையும் ரிஷி மற்றும் சவுந்தர ராஜா, விக்ரம் பிரபுவையும் அவரது காதலி ஶ்ரீ திவ்யாவையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி செல்கின்றனர் .


இதில் ஶ்ரீ திவ்யா இறந்து விடுகிறார் .


மரண தருவாயில் உயிர் தப்பிக்கும் விக்ரம் பிரபு முடிவில் தன் காதலி ஶ்ரீ திவ்யாவை கொன்ற ரவுடி ரிஷியையும்,,,,சவுந்தரராஜாவையும்

பழிக்கு பழி வாங்கினாரா? என்பதை சொல்லும் படம்தான் 'ரெய்டு'


நாயகனாக கம்பிரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விக்ரம் பிரபு காதல் காட்சிகளில் காதல் நாயகனாகவும் , ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார் .


கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் ஶ்ரீ திவ்யா.


வில்லன்களாக அமைதியான மிரட்டலில் சவுந்தரராஜாவும் ,,அசத்தலான மிரட்டலில் ரிஷியும் நடிப்பில் போட்டி போடுகின்றனர் .


இவர்களுடன் ஆனந்திகா , வேலு பிரபாகரன் ,செல்வா ,ஜார்ஜ் ,டேனியல் அன்னி போப் ,ஹரிஷ் பேராடி,கண்ணன் பொன்னையா ,சாமிநாதன் என நடித்த அனைவரது நடிப்பும் சிறப்பு .


சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் ஓகே பின்னணி இசை கை கொடுக்கவில்லை ஏகப்பட்ட இரைச்சல் .

கதிரவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !


ரவுடியிசம் செய்யும் தாதாக்களை ஒழிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரியை அழிக்க முயற்சிக்கும் ரவுடிகளின் கதையை மையமாக வைத்து சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் இயக்குனர் முத்தையாவின் ரசிக்கும்படியான வசனங்களுடன் ஒரு ஆக்க்ஷன் படத்திற்கான திரைக்கதை அமைப்புடன் கமர்ஷியல் கலந்த ஆக்க்ஷன் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக்.


ரேட்டிங் ; 3 / 5



bottom of page