top of page
mediatalks001

'ஜப்பான்' பட விமர்சனம்


கோவை மாநகரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கப் படுகிறது.

அரசியல் பெரும் புள்ளிகள் பினாமியாக இருக்கும் அந்த நகைக்கடையில் கொள்ளையை கார்த்தி தான் செய்திருப்பதாக போலீஸ் நினைத்து தீவிரமாக அவரை தேடுகிறது.

பிரபல கொள்ளையனான கார்த்தி, கொள்ளையடித்த பணத்தை வைத்து திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, ஆடம்பரமாகவும் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்தி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகிறார்.

இந்நேரத்தில் ஏற்கனவே கொள்ளையடித்த நகைகளை எழை மக்களுக்கு கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் போலீசின் தேடுதல் வேட்டையில் கார்த்தி மாட்டி கொள்ள ,,அந்த நகைகளை நான் கொள்ளையடிக்கவில்லை என மறுக்கிறார்.

செய்யாத குற்றத்திற்காக போலீஸ் தன்னை துரத்த அவர்களிடம் இருந்து தப்பித்து செல்லும் கார்த்தி உண்மையான குற்றவாளி யார்? என்பதை போலீஸ் தரும் cctv வீடியோ பதிவின் மூலம் சாமர்த்தியமாக கார்த்தியே கண்டுபிடிக்கிறார் .

முடிவில் கோடிக்கணக்கான நகைகளை கொள்ளையடித்த அந்த மர்ம நபர் யார்?

போலீசின் பிடியில் இருந்து கார்த்தி தப்பித்தாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'ஜப்பான்'

நாயகனாக நடிக்கும் கார்த்தி வித்தியாசமான தோற்றத்தில் உடல்மொழியிலும் பேசும் வசனங்களிலும் வழக்கமான பாணியில் நடிக்காமல் படம் முழுவதும் 'ஜப்பான்' என்ற கதாபாத்திரமாகவே ரசிகர்கள் மனதில் பதியும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நாயகியாக நடிக்கும் அழகான அனு இம்மானுவேல் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .


கே எஸ் ரவிக்குமார் ,ஜித்தன் ரமேஷ், வாகை சந்திரசேகர், காவல்துறை அதிகாரியாக நடிக்கும் விஜய் மில்டன் , சுனில் ,பாவா செல்லத்துரை என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.


நகை கடை கொள்ளையை மையமாக கொண்ட கதையுடன்,,,, திரைக்கதையில் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் 'ஜப்பான்' கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் இதுவரை பார்க்காத கார்த்தியை ரசிகர்கள் ரசிக்கும்படி நடிக்க வைத்து அரசியல் கலந்த ஆக்க்ஷன் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜு முருகன்.


ரேட்டிங் ; 3.5 / 5









Comments


bottom of page