top of page

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பட விமர்சனம்


1975ம் ஆண்டு மிக பெரிய ரவுடியாக மதுரையில் வாழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

மற்றொரு பக்கம் ரத்தத்தை பார்த்தாலே மயக்கமாகும் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் எஸ்.ஐ-க்கு தேர்வாகி வேலைக்கு செல்லும் நிலையில் செய்யாத கொலைகளுக்கு குற்றவாளியாகி ஜெயிலுக்கு செல்கிறார் .

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தன் சகாக்களுடன் நான் கதாநாயகனாக நடித்தால் வேற லெவல் என ஜாலியாக பேசும்போது அங்கிருக்கும் அரவிந்த் ஆகாஷ் கறுப்பாக இருக்கும் நீ எப்படி ஹீரோ ஆக முடியும் என கேட்கிறார். இதனால் தான் ஹீரோவாக வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் முடிவு எடுக்கிறார்.

இதற்காக இயக்குனர் ஒருவரை தேடும் நேரத்தில்,,,, ஜெயிலில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் ராகவா லாரன்சை கொலை செய்ய வேண்டும் , நீ செய்யும் கொலைக்கு கைமாறாக நிரந்தர விடுதலையும் போலீஸ் எஸ் ஐ பணியும் உனக்கு கிடைக்கும் என போலீஸ் அதிகாரி கூறுகிறார்.


எஸ்.ஜே.சூர்யாவும் அதை ஒப்புக் கொண்டு மதுரை செல்கிறார்.


அங்கு ராகவா லாரன்ஸ் இயக்குனர்தேடுவதை அறிந்து, உன் சுய சரிதையை கதையாக வைத்து உன்னை நாயகனாக படம் எடுக்கிறேன் என எஸ்.ஜே.சூர்யா சொல்ல,, ,,

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இயக்குனர் பொறுப்பை கொடுத்து அவருடனே பயணிக்கிறார் ராகவா லாரன்ஸ் .


படம் எடுக்கும் நேரத்தில் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார் எஸ்.ஜே.சூர்யா.


முடிவில் திட்டமிட்டபடி ராகவா லாரன்சை எஸ்.ஜே.சூர்யா கொன்றாரா?


எஸ்.ஜே.சூர்யாவின் கொலை திட்டம் ராகவா லாரன்ஸுக்கு தெரிந்ததா?


ராகவா லாரன்ஸை வைத்து முழு படத்தையும் எஸ்.ஜே.சூர்யா எடுத்து முடித்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’


நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் வில்லத்தனமான நடிப்பில் அசத்தினாலும் முடிவில் மக்களுக்காக வாழும் நாயகனாக ரசிகர்கள் மனதில் பதியும்படி நடிப்பில் ஜொலிக்கிறார் !


இயக்குனராக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா அனுபவ நடிகராக உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


ராகவா லாரன்ஸின் மனைவியாக பழங்குடிப் பெண்ணாக நடிக்கும் நிமிஷா சஜயன், காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நவீன்சந்திரா, அமைச்சராக நடிக்கும் இளவரசு, சத்யன், ஷீலா ராஜ்குமார் என அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது .


சந்தோஷ் நாராயணன் இசையும்,,,ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


1975ம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெறும் கதையில் ஆரம்பத்தில் நகரத்தின் ரவுடியிச வாழ்க்கையை மிரட்டலாக சொல்வதுடன் ,,, இடைவேளைக்கு பின் கேங்ஸ்டர் கதையாக காட்டை அழிக்கும் அரசியலை மையப்படுத்தி காட்டுக்குள் கூட்டமாக யானைகள் வரும் காட்சிகளை சிறப்பாக படமாக் கியிருப்பதுடன் ரசிகர்கள் கொண்டாடும் ஆக்க்ஷன் கலந்த பக்கா மாஸான படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.


ரேட்டிங் ; 3.5 / 5



تعليقات


bottom of page