Chevvaikizhamai Cast & Crew
Payal Rajput,
Sritej,
Ajmal Ameer,
Chaitanya Krishna,
Ajay Ghosh,
Laxman and others.
Digital Marketing: Talk Scoop
Executive Producer: Saikumar Yadavilli
Editor: Gullapalli Madhav Kumar
Dialogue writers: Tajuddin Syed, Raghav
Art Director: Mohan Talluri
Production Designer: Raghu Kulkarni
Fight Masters: Real Satish, Prithvi
Sound Designer & Audiography: National Award winner Raja Krishnan
Cinematographer: Dasaradhi Sivendra
Choreographer: Bhanu
Costume Designer: Mudasar Mohammad
Music Director: B Ajaneesh Loknath
Story, Screenplay, Direction: Ajay Bhupathi.
லஷ்மிபுரம் கிராமத்தின் மத்தியில் உள்ள சுவற்றில் கள்ள தொடர்பில் உள்ளவர்களை பற்றி சில வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது.
சில மணி நேரங்களுக்கு பிறகு சுவற்றில் எழுதப்பட்ட நபர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
சுவற்றில் எழுதப்பட்டவாசகங்களும் அதன் பின் நடக்கும் மர்ம மரணங்களும் சரியாக செவ்வாய்கிழமையில் மட்டுமே நடக்கிறது.
மர்ம மரணத்தின் பின்னணியை கண்டுபிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா விசாரணையில் இறங்க ,,,, ஊர் தலைவரான ஜமீன்தார் இந்த மரணங்கள் தற்கொலைதான் யாரும் இவர்களை கொல்லவில்லை என சொல்கிறார் .
இந்நேரத்தில் மீண்டும் இதே போல ஒரு மர்ம சம்பவம் நடைபெறுகிறது .
இக் கொலைகளை செய்யும் குற்றவாளிகளை தேடி கொண்டிருக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதாவிடம்,, இந்த கிராமத்தில் நடக்கும் மர்ம மரணங்களுக்கு இங்கு வாழ்ந்து இறந்துபோன பருவ பெண்ணான பாயல் ராஜ்புட் தான் காரணம் என கிராம மருத்துவர் சொல்கிறார்.
அந்த கிராமத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படும் பாயல் ராஜ்புட் யார் ?
அவருக்கும் இந்த மர்ம மரணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன ?
என்பதை சொல்லும் படம்தான் "செவ்வாய்கிழமை"
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக ஷைலஜாவாக நடிக்கும் பாயல் ராஜ்புத் உடலளவில் காமம் சார்ந்த நோயினால் மனதளவில் பாதிக்கப்பட்டு வலிமிகுந்த வாழ்க்கையுடன் வாழும் பெண்ணாக உணர்வுபூர்வமான நடிப்பில் அனுபவ நடிகையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
இயல்பான நடிப்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடிக்கும் நந்திதா ஸ்வேதா
ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், ஸ்ரீலேகா ,லக்ஷ்மன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் இசையுடன் பின்னணி இசை கதையின் வேகத்திற்கு இணையாக அசத்தல் !
ஒளிப்பதிவாளர் தசரதி சிவேந்த்ராவின் ஒளிப்பதிவும் ,,,,குல்லப்பள்ளி மாதவகுமாரின் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் !
"செவ்வாய்கிழமை" அன்று கிராமத்தில் நடக்கும் தொடர் மர்ம கொலைகளின் பின்னணியோடு கதையுடன் பயணிக்கும் காட்சிகளில் பேய் படம் பார்க்கும் உணர்வை பயத்துடன் ரசிகர்கள் பார்க்கும்படி விறு விறுப்பாக மிரட்டலான திரைக்கதை அமைப்பில் ,,,,க்ளைமாக்ஸில் யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத திருப்புமுனையுடன் திகிலுடன் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லராக பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அஜய் பூபதி.
ரேட்டிங் ; 3.5 / 5
Yorumlar