top of page

'ஜோ' - மனதை கலங்க வைக்கும் அழுத்தமான காதல் கதை ; விமர்சனம்


Cast ;

RIO RAJ,MALAVIKA MANOJ,BHAVYA TRIKHA,CHARLIE,ANBUTHASAN,AEGAN,VJ RAKESH

ELANGO KUMANAN,JAYAKUMAR,M J SHRIRAM

Crew ;

COSTUME DESIGNER-SRIDEVI GOPALAKRISHNAN,CHOREOGRAPHERS- ABU & CHALS

PRO-SURESH CHANDRA,REKHA,NASSAR

LYRICIST-VAISAGH,VIGNESH RAMAKRISHNA,RIO RAJ,KIRAN VARTHAN

STUNT-POWER PANDIAN

ART DIRECTOR-ABR

EDITOR-VARUN K.G

CINEMATOGRAPHY-RAHUL KG VIGNESH

MUSIC-SIDDHU KUMAR

EXECUTIVE PRODUCER-VEERA SANKAR

CO PRODUCER-K.SRINIVAS NIRANJAN

PRODUCED BY-DR.D.ARULANANDHU,MATHEWO ARULANANDHU

WRITTEN & DIRECTED BY-HARIHARAN RAM S

பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் படிக்கும் ரியோ ராஜ் சக மாணவியான மலையாள பெண்ணான மாளவிகா மனோஜை மனதார காதலிக்கிறார்.

இருவரும் காதலர்களாக இருக்கும் நேரத்தில் இவர்களின் காதலுக்கு மாளவிகா மனோஜின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

எதிர்ப்பையும் மீறி காதலர்கள் அடிக்கடி சந்தித்து கொள்ள ,,,மாளவிகா மனோஜ் ரியோ ராஜை தன் பெற்றோரிடம் பேச அழைக்கிறார் .

மாளவிகா மனோஜின் குடும்பத்தாருக்கும் ரியோ ராஜிக்கும் ஏற்படும் பிரச்சனையால் காதலர்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இக்கட்டான இந்நேரத்தில் மாளவிகா மனோஜிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாட்டினை செய்கின்றனர் .

திருமணத்தை விரும்பாத மாளவிகா மனோஜ் காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் .

மாளவிகா மனோஜின் தற்கொலையால் பாதிப்படைந்த ரியோ ராஜ் தன்னை தானே அழித்துக்கொள்ள தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் .

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிழைத்து கொள்ளும் ரியோ ராஜ் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆலோசனைப்படி மற்றொரு நாயகியான பவ்யா ட்ரிகாவை திருமணம் செய்து கொள்கிறார் .

திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத பவ்யா ட்ரிகாவுக்கு ரியோ ராஜை கணவராக ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை பார்த்தாலே கோபமடைந்து எரிச்சலடைகிறார் .


முடிவில் பவ்யா ட்ரிகா திருமணத்தை வெறுப்பதற்கான காரணம் என்ன ?


பவ்யா ட்ரிகாவின் பிரட்சனையை தெரிந்து கொண்ட ரியோ ராஜ் சாமர்த்தியமாக அதனை தீர்த்து வைத்தாரா ?


மாளவிகா மனோஜின் காதலை போல பவ்யா ட்ரிகாவுடன் நடந்த திருமணமும் ரியோ ராஜிக்கு தோல்வியில் முடிந்ததா? என்பதை சொல்லும் படம்தான் 'ஜோ'நாயகனாக நடிக்கும் ரியோ ராஜ் ஜாலியான கல்லூரி மாணவராக,,,, உணர்வுபூர்வமான நடிப்பில் காதல் தோல்வியால் மனமுடைந்த சோகத்தை வெளிப்படுத்த தாடி, முடி என 'ஜோ' கதாபாத்திரமாகவே இயல்பாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடிக்கும் அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் அமைதியான அழகில் அழுத்தமான நடிப்பில் அனைவரது பாராட்டை பெறுகிறார் .


மற்றொரு நாயகியாக நடிக்கும் பவ்யா ட்ரிகா கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !

சார்லி, , அன்புதாசன், ஏகன், விஜே ராகேஷ், ஜெயகுமார் ,இளங்கோவன் குமணன் ,ஸ்ரீராம் என நடித்த நடிகர்கள் அனைவரும் கதைக்கு பக்க பலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

இசையமைப்பாளர் சித்து குமாரின் இசையில் பாடல்களும் , பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்! குறிப்பாக 'உருகி உருகி' பாடல் காதலர்களுக்கான தேசிய கீதம்!


ஒளிப்பதிவாளர் ராகுல் கே.ஜி.விக்னேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !


கல்லூரியில் நடக்கும் காதல் கதையாக இருந்தாலும் தமிழ் மலையாளம் என மொழிகளில் வேறுபட்ட காதலர்களின் ரசிக்கும்படியான கதையில் நேர்த்தியான அழுத்தமான திரைக்கதை அமைப்பில் காதல் தோல்வியால் பாதிப்பான ஒருவனுக்கு அதனை கடந்து சென்றால் அவனுக்கான மற்றொரு காதல் வாழ்க்கை கண்டிப்பாக காத்திருக்கும் என்பதை வாழ்வின் அழகியலோடு இயல்பாக சொல்வதுடன் இரண்டு காதல் கதைகளையும் அனைவரும் ரசிக்க கூடிய அழுத்தம் கலந்த உணர்ச்சிமயமான காதல் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் .


ரேட்டிங் ; 3. 5 / 5


bottom of page